கழுத்து வலி அதிகமாக இருக்க இதுதான் காரணமாம்! அலட்சியம் வேண்டாம்!

0

இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் வலி என்று பல வலிகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கழுத்து வலி என்பது தோள்பட்டை மற்றும் கழுத்து இணையும் இடம் அல்லது முதுகுப் பகுதியின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகளாகும்.

முக்கியமாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு தான் கழுத்து வலியில் இருந்து அனைத்து வகையான வலிகளும் வரும்.

கழுத்து வலி ஏற்பட காரணம்
கழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்து முதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படக்கூடும்.

கழுத்து தசைகளுக்கு அதிக டென்ஷன் ஏற்படும் போது அதீத கழுத்து வலி ஏற்படும். தவறான பொசிசனில் நீண்ட நேரம் தூங்கும் போது உங்களையும் அறியாமல் வலி ஏற்படும்.

நீண்ட நேரம் ஒரே பொசிசனில் இருப்பதால் கழுத்து தசை டெம்ப்பராக ஒரே நிலையில் வைத்திருப்பதாலும் தசை சோர்வடையும்.

நாம் உட்காரும் பொசிசன் மற்றும் கணினி வைத்திருக்கும் பொசிஷன் இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி.புற்றுநோய், தைராய்டு சுரப்பியில் தாக்குகிற புற்றுநோயின் முதல் அறிகுறி கழுத்து வலியாகத் தான் இருக்கும்.

ஆனால் தைராய்டு சுரப்பி புற்றுநோய் மிகவும் அபூர்வமாகத்தான் தாக்குகிறது. இதைத் தவிர முதுகுத்தண்டில் ஏற்படுகிற கட்டி ஆகியவற்றிற்கு கூட இடது பக்க கழுத்து வலி எடுக்கும்.|

இதைத் தவிர ஏதேனும் நரம்புக் கோளாறு இருந்தாலோ அல்லது முதுகுத்தண்டு பகுதியில் கட்டி ஏற்பட்டிருந்தால் கூட இடது பக்க கழுத்தில் வலி ஏற்படக்கூடும்.

சில நேரங்களில் கழுத்து வலி தோள்பட்டை வலியாகவும் அடையாளப்படுத்தப்படும். இவற்றில் இடது பக்கம் மட்டும் நீண்ட நாட்கள் கழுத்து வலி இருந்தால் என்ன காரணி, அதற்கு மருந்தாக என்ன எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ளாம்.

கழுத்து வலி குணமாக
பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது.

கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தரவும். கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.

தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்க ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்.

அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போதும், கம்ப்யூட்டர் முன் அமரும் போதும் நேரான கோணத்தில் அமரவும்.

உறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம். மேஜையில் அமர்ந்து பணியாற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் வாழைப்பூவை சாப்பிடுபவரா! நீரிழிவு நோயாளிகளே! இனி சாப்பிட்டால் முழுசா தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!
Next articleஇரவில் நிம்மதியாக தூங்க தினமும் இதை குடியுங்கள்! நன்மைகளோ ஏராளம்!