டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது!

0

டூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகிறது என சில ஆராய்சிகளின் மூலம் தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து. அயர்லாந்தில் நடத்தபட்ட ஓர் ஆய்வில், டூத்பேஸ்ட்டுக்கு சிறந்த மாற்று பொருள் தேங்காய் எண்ணெய் தான் என கண்டறிந்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் வாயை சுத்தம் செய்யவும், பற்களை தூய்மைப்படுத்தவும் வெகுவாக உதவுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் உடல்நலத்திற்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்….

அயர்லாந்து ஆய்வு

அயர்லாந்தில் உள்ள ஏத்லோன் தொழில்நுட்ப மையம் நடத்திய ஆராய்ச்சியில் நீங்கள் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டை விட ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் நல்ல பயனளிக்கிறது என கண்டறியப்பட்டது.

தேங்காய் எண்ணெய் எப்படி?

தேங்காய் எண்ணெய் உங்கள் பற்களில் சுத்தப்படுத்தவும், சொத்தை போன்ற சேதம் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

பக்கவிளைவுகள்

நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டுகளில் ஃப்ளோரைடு கலப்பு உள்ளது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பது ஆகும். ஆனால், தேங்காய் எண்ணெயில் இது போன்ற எந்த பக்கவிளைவுகளும் இல்லை.

வாய் கரை

மேலும், தேங்காய் எண்ணெய் பாக்டீரியாக்கள் மூலம் வாயில் உண்டான கரைகளை போக்கவும் பயனளிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

டூத்பேஸ்ட்டில் இல்லாதது….

தேங்காய் எண்ணெய் வாயில் இருக்கும் உண்டாகும் ஈஸ்ட் கிருமிகளை அழிக்கிறது, வாய்தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதனால் வாய், ஈறு மற்றும் பற்கள் சார்ந்த பிரச்சனையை குறைக்க முடிகிறது.

இரசாயனங்கள்

வாயை சுத்தம் செய்ய டூத்பேஸ்ட்டுகளில் நிறைய இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உடலுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆனால், தேங்காய் எண்ணெயில் எந்த இரசாயனமும் இல்லை.

எவ்வளவு எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை ஆயில் புல்லில்ங் முறையில் பயன்படுத்த வேண்டும். ஓர் ஸ்பூன் அளவு மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. நன்கு ஆயில் புல்லிங் செய்துவிட்டு வாயை கழுவிக் கொள்வது போதுமானது.

கவனம் தேவை

ஆயில் புல்லிங் செய்த பிறகு அதை முழுமையாக துப்பிவிட வேண்டும், முழுங்கிவிட கூடாது. துப்பிவிட்டு நல்ல நீரில் வாயை கழுவி கொள்தல் போதுமானது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெண் புள்ளி நோய்க்கு எளிய வீட்டு மருத்துவம்!
Next articleதிருகோணமலைக் கடலில் யாரும் அறியாத அதிசயம்!