ஜாதிக்காயின் மருத்துவ மகிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! ஆண்களுக்கு சிறந்த இன்பமூட்டி !

0

ஜாதிக்காய் மொலுக்கஸ் தீவில் தோன்றியதாக வரலாறுகள் சான்றுபகா்கின்றன, நமது தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல்,கன்னியாகுமரி, மற்றும் சேலம் ஆகியமாவட்டங்களில் மட்டுமல்லாது உலகெங்கும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப்பிரதேசங்களில் களிமண் கலந்த தோமிலி மண்ணில் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான மெல்லிய தோல் போன்ற பகுதிதான் ஜாதிபத்திரி எனப்படும். சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்றும் பெயர்.

நாம் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், பற்பசை போன்றவற்றில் “மேசின்” என்ற வேதிப்பொருள் ஜாதிக்காயிலிருந்தே பெறப்படுகின்றது இதே போல் “மிரிஸ்டிசின்” என்ற வேதிப் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகளின் படி இத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் இரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும் ஜாதிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” என்ற வேதிப்பொருள் வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது ,மேலும் பாக்டீரியா மற்றும் கரப்பான், பூச்சி கொல்லியாகவும் பயன்படுகிறது.

10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய்ச் சாறு ஒரு மே,க அளவு கலந்து சாப்பிட்டால் விக்கல்,மறதி, தூக்கமின்மை, ஆகியவை குணமாகும்.

ஜாதிக்காய் பொடியை 1/2 கி.ம் அளவு பாலில் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், வயிற்றுப் போக்கு தீரும், விந்து உற்பத்தி அதிகாிக்கும், நடுக்கம், ஓங்காளம் ஆகியவற்றைப் போக்கும்.

ஜாதிக்காயினை உடைத்து ஒரு டம்ளர் நீரில் இட்டு நன்றாக காய்ச்சி குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

தேநீா், காப்பி போன்ற பானங்களில் ஜாதிக்காய் பொடியை பயன் படுத்தினால் உடலுக்கு உற்சாகத்தை தரும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும் என்றும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

BY: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகணவரை இழந்த பெண்கள் ஏன் பொட்டு வைக்க கூடாது என்று தெரியுமா ! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleபல நோய்களை தீர்க்கும் திராட்சைப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?