ஜலதோஷம், மூக்கடைப்பு பிரச்சினைக்கு எளிய வீட்டு வைத்திய முறைகள்!

0

நீங்கள் மருத்துவமனைக்கு சென்று ஐநூறு, ஆயிரம் என்று செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?

உங்கள் வீட்டில் இருந்தப்படியே, இந்த இயற்கை வீட்டு வைத்திய முறையை பின்பற்றினால் இந்த சின்ன சின்ன உடல்நலக் குறைபாடுகளை மிக எளிதாக சரி செய்துவிடலாம்.

ஜலதோசம்:

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்துக்கொள்ளவும். இதை, தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.

உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது. மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

சளி:

முருங்கைகாயை நசுக்கி, அதனுடைய சாற்றினை எடுத்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை குணமாகும்.

ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?

தேவையான பொருட்கள்:

1 கப் ஆப்பிள்,
1 கப் எலுமிச்சைச் சாறு,
1 கப் இஞ்சி சாறு,
1 கப் வெள்ளைப்பூண்டு
செய்முறை!

இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து, பிறகு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து, அத்துடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், ஜீரணம் போன்றவை சரியாகும்.

மேலும், இது உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் பயனளிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடை, சர்க்கரை அளவு குறைய என பல சிக்கலுக்கு உருளைக் கிழங்கின் தோலின் நன்மைகள்!
Next articleகுபேரப் பொம்மையை இப்படி வைத்து வழிபட்டால் அதிஷ்டக்காற்று வீசுமாம் உங்களுக்கு!