ஜனாதிபதி மைத்திரி ஐ,நா சபையில் விடுத்த கோரிக்கை!

0

இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் மீறல் என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது அமர்வு உரையின் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமது பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண சர்வதேசம் உதவ வேண்டும். இறைமையுள்ள நாடு என்ற வகையில் வெளிச்சக்திகளின் தலையீடு அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

30 வருடங்களாக இலங்கை பாரிய போர் ஒன்றுக்கு முகம் கொடுத்தது. இந்நிலையில் போர் முடிவடைந்து 3 வருடங்களில் இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்கம் வன்முறை மீண்டும் எழாமை உட்பட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

போர் முடிவடைந்து 10 வருடங்களாகியுள்ள நிலையில் முன்னர் இருந்த இலங்கை தற்போது இல்லை.

இலங்கையின் பிரச்சினைகளை தாமே தீர்த்து கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையை வழங்கி ஒத்துழைக்குமாறு சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

கடந்த 3 வருடங்களில் இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருந்த மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை தாம் நாடாளுமன்றத்துக்கு வழங்கியதாகயும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மேம்பாடு விடயத்தில் ஐக்கிய நாடுகளின் உதவியை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தனது உரையின் போது தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடிதம் எழுதி விலகிய இரா.சம்பந்தன்! நான் தமிழரசுக்கட்சி இல்லை!
Next articleஇலங்கையர்கள் பலரின் மனதை நெகிழ வைத்த திருமணம்!