சொரியாசிஸ், படை, சொறி, அரிப்பு, சரும வறட்சி என பல நோய்களுக்கு நோய்களுக்குச் சிறந்த சிகிச்சை! வாழை இலைக் குளியல்!

0

கசகசன்னு வியர்வையே பிடிக்காதா உங்களுக்கு? வியர்வை அசௌகரியம் அளிப்பது மட்டுமல்ல. அது நம் ஆரோக்கியத்தின் வெளிப்பாடும் கூட.

வியர்வை வரும்போது, சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு வியர்வையை வெளியேற்றுகிறோமோ, அந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆரோக்கியம் பெருகும்.

ஆனால் இன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில், எப்போதும் ஏ.சி அறையில் இருப்பதால், பலருக்கும் வியர்ப்பதே இல்லை. இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுகிறது. இதுவே, பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

மேற்கத்திய நாடுகளில் அதிகக் குளிர் என்பதால், வியர்வை வெளியேறுவது குறைவாக இருக்கும். இதனால், அவர்கள் சோனாபாத், ஸ்டீம்பாத் எனப் பல வகையான ஸ்பாக்களுக்கு (குளியல்கள்) செல்வார்கள்.

நம் ஊரில் அதற்கு இணையாக, இயற்கை ஸ்பாக்கள் உள்ளன. அதில் ஒன்று வாழை இலைக் குளியல். வாழை இலையில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பாலிபீனால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கார்பன்டை ஆக்ஸைடை ஈர்த்து, ஆக்சிஜனை வெளியிடும் அளவு வாழையில் அதிகம். அதனால், உடலில் உள்ள கெட்ட வாயு, கழிவுகளை வெளியேற்றுகிறது. வாழை இலைக் குளியல் உடலில் உள்ள புண்களை ஆற்றுவதில் மிகவும் சிறந்தது.

யாரெல்லாம் வாழை இலைக் குளியல் மேற்கொள்ளலாம்?
இயற்கையான முறையில் உடலில் இருந்து கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றுவதே வாழை இலைக் குளியல். 18 – 80 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் குளியலை எடுக்கலாம். ஆஸ்துமா நோயாளிகள், பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் இதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்தக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

வாழை இலைக் குளியலுக்குத் தயாராகும் முன், போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது, உடலில் அதிகப்படியான வியர்வை சுரக்க உதவும்.

காலை 12 மணிக்கு முன் இந்தக் குளியலை எடுத்துவிட வேண்டும். வீட்டில் செய்வதைத் தவிர்த்து, மருத்துவர் உதவியுடன் செய்வது நல்லது.

மாதம் ஒருமுறை வாழை இலைக் குளியல் செய்துகொள்ளலாம். நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதற்கு மிகச்சிறந்த சிகிச்சையாகச் செயல்படும்.

எப்படிச் செய்வது?
சிகிச்சைக்கு வருபவர், வெயிலில், குறைந்த ஆடைகளுடன் வாழை இலை மீது படுக்கவைக்கப்படுவார். அவர்களை வாழை இலைகளால் மூடிவிடுவர். சுவாசிக்க மூக்குப் பகுதியில் சிறு துளையிடப்படும். உடல் முழுவதும் இலையால் போர்த்தி, வாழை நாரால் கட்டிவிடுவர். இந்த நிலையில் வெயிலில் 20-25 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் இலைகளில் படும்போதுதான், அது நம் உடலிலும் பட்டு கழிவுகளை வெளியேற்றும்.

பலன்கள்
வாழை இலைகள் மேல் சூரியக் கதிர்கள் பட, நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும். உடல் எடை குறைப்பதற்கும் இந்தக் குளியல் உதவும்.

ரூமாடாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid arthritis) உள்ளவர்களுக்கு, எப்போதும் வலி இருக்கும். அவர்களின் வலி குறைய இந்தக் குளியல் உதவும்.

சொரியாசிஸ், படை, சொறி, அரிப்பு, சரும வறட்சி போன்ற பல்வேறு சரும நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாக இருக்கும்.

உடல்பருமன் மற்றும் அதனுடன் வேறு பிரச்னைகளும் இருப்பவர்கள், மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் வாரத்துக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு, தேங்கிய கழிவுகள் வெளியேறும். மூட்டு வலி, உடல் வலி நீங்கும்.

இதய நோயாளிகள் இந்தக் குளியலை எடுக்கலாம். மயக்கம் வருவது போல இருந்தால், அதற்கு பயப்படத் தேவை இல்லை. வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் வெளிப்பாடுதான் இது. மருத்துவர் உதவியுடன் இதய நோயாளிகளும் இந்த குளியலை எடுப்பது நல்லது.

கை, கால்களில் வீக்கம் இருப்பவர்கள் இவற்றைச் செய்துவர வீக்கம் குறையும். உடலுக்குப் புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article30 வயதை கடந்தும் திருமணம் ஆகாதவரா நீங்கள்! அப்போ இந்த பதிவு கட்டாயம் உங்களுக்குதான்!
Next articleமஞ்சள் காமாலை வருவதற்கு இதுதான் மிக முக்கிய காரணம்! அனைவரும் அறிந்து கொள்ளுங்க!