சொட்டை விழுந்த இடத்தில் முடி வளரும்: பலன் தரும் டிப்ஸ்!!

0

முடி உதிரும் பிரச்சனை அளவுக்கு அதிகமாக இருந்தால் விரைவில் தலையில் சொட்டை விழுந்து விடும். இதனை தடுக்க சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ள சில டிப்ஸ்கள்,

முடி கருமையாக
அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.

மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

நரை முடி மறைய
எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் ஆகிய அனைத்தையும் சம அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்கு மேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி மறையும்.

பொடுகு குறைய
தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர பொடுகு குறையும்.

வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்.

வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

முடி அடர்த்தியாக வளர
10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு நன்றாக அரைத்து அதனை தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து குளித்து வர முடி அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலையை தயிருடன் அரைத்து தலையில் தடவி 1/2 மணி நேரம் கழித்து குளித்து வர முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து அந்த எண்ணெயை காய்ச்சி தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

சொட்டையில் முடி வளர
பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும்.

பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வர சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும்.

முடி உதிர்வு நிற்க
வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைத்து நன்கு அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

வழுக்கையில் முடி வளர
வெங்காயம், செம்பருத்தி பூ ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து அதை வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபல் வலி, வெள்ளைப்போக்கு பிரச்னையை சரிசெய்யும் ஈச்சங்காய் !!
Next articleஇவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா?