சேற்றுப்புண், மண்டைக்குத்தல், மண்டையிடி, மூக்கடைப்பு, நாசி ஒழுகுதல், கண் வலி என்பன குணமாக பாட்டியின் மருந்து!

0

சேற்றுப்புண் குணமாக:
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
அம்மான் பச்சரிசி இலையை வெறுமனே அரைத்துப் பூசலாம்.
மஞ்சளை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
வேப்ப எண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம்.
மேற்சொன்ன நான்கில் ஏதேனும் ஒன்றைச் செய்து, சேற்றுப்புண்ணில் பூசுவதன் மூலமாக குணமாகலாம்.

தலைவலி, சளி: விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் நனைத்து, தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு, நாசி ஒழுகுதல், தலைவலி போன்றவை சரியாகும்.

தும்பை இலைச்சாற்றை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் தேங்கியிருக்கும் நீர், கபால நீர், மண்டைக்குத்தல், மண்டையிடி போன்றவை குணமாகும்.

தும்பை இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால் சளி விலகும். 20 தும்பைப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து சுமார் அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தால் தலைபாரம், ஜலதோஷம் போன்றவை சரியாகும்.

மஞ்சள்பொடியை நீரில் கலந்து மெல்லிய பருத்தித் துணியில் நனைத்து நிழலில் காயவைத்து கண்களை துடைத்து வருவதன் மூலம் கண் வலி, கண் சிவத்தல் போன்றவை சரியாகும்.

சொறி, படை: மஞ்சளுடன் வேப்பங்கொழுந்தை சேர்த்து அரைத்துப் பசையாகக் குழைத்து பூசி வந்தால்… சொறி, அரிப்பு, படை மற்றும் படர்தாமரை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் !!
Next articleஒரு டம்ளர் நீரில் 10 ‍ 15 தூதுவளை இலைகளைப் போட்டுக் காய்ச்சிக் குடிநீராக்கி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!