சீரான மாதவிலக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !11

0

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது மாதந்தோரும் தவறாமல் வரும் மாதவிடாய் நிகழ்வு தான். இந்நிகழ்வு சீராக இல்லையெனில் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

இப்பிரச்சனையை தீர்க்க சில ஆரோக்கியமான உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

பப்பாளிக் காய்
பப்பாளிக்காயில் உள்ள சத்துக்கள் கர்ப்பப்பையை சுற்றி உள்ள தசைகளை பலப்படுத்தி, மாதவிலக்கை சீராக்குகிறது.

எனவே தொடர்ந்து 2 மாதங்களுக்கு அடிக்கடி பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலனைக் காணலாம்.

சோம்பு
ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் சோம்பை போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் மாதவிலக்கு முறையாக நடைபெறும்.

பாகற்காய் ஜூஸ்
பாகற்காயை பொடியாக நறுக்கி, அதனுடன் 1 கிளாஸ் நீரை சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு முறைகள் குடித்து வந்தால் கர்ப்பப்பை பிரச்சனைகள் நீங்கி, மாதவிடாய் சீராகும்.

கற்றாழை
கற்றாழையில் உள்ள சதைப்பகுதியை எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரைப்பை, கர்ப்பப்பை ஹார்மோன் ஆகியவற்றில் உள்ள அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.

முள்ளங்கி
முள்ளங்கியை நறுக்கி நன்கு பேஸ்ட் போல அரைத்து, அதனுடன் 1 டம்ளர் மோர் கலந்து அதை அவ்வப்போது தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Previous articleநேரத்திற்கு வரலையா மாதவிலக்கு? இந்த சூப்பை குடிங்க!
Next articleமாதவிலக்கு பிரச்னையை போக்கும் கழற்சிக்காய்!