Home Jaffna News சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் கைது!

சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்: தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் கைது!

0
520

நுவரெலியா – கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரையும் நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிகளின் தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன், சிறுமிகளின் தாயார் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மூவரும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிகள் கொழும்புக்கு தப்பிச்சென்ற நிலையில், நிர்க்கதிக்குள்ளான சிறுமிகளை பொலிஸார் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிறுமிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சிறுமிகளின் தந்தை உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleதிருமணமாகி 5 மாதத்தில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கையர்!
Next articleஇலங்கையில் பட்டப்பகலில் மாணவன் மீது கொடூர தாக்குதல் – நெஞ்சை பதற வைக்கும் காணொளி!