சிறுநீரக நோய்களை குணமாக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

0

சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படும் தண்ணீர் முட்டான் கிழங்கு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி.

பலவிதமான சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும், சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும் உதவுகிறது.

இது சிறுநீர் போக்கினை தூண்டி மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

இதற்கு இதிலுள்ள செயல் திறன் மிக்க வேதிபொருட்கள் ஆன ஸ்டிராய்டல், ஃபிளேவனாய்டுகள், குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள் போன்றவையே காரணம்.

சிறுநீரக நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் நரம்பு மண்டல நோய்களையும், மலட்டு தன்மையையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க உதவும் தைலங்களில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

பால்வினை நோயான கோனேரியாவுக்கு மருந்தாக பாலுடன் கலந்து தரப்படும் இத்தாவரம் பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதில் முக்கிய பங்காற்றி பெண்குறி கோளாறுகளைப் போக்கிடவும் உதவுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article30 வயதை தொடும் ஆண்களா நீங்கள் கண்டிப்பாக இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
Next articleஇதயத் துடிப்பை சீராக்கும் கிவி பழம்!