தீராத சளி தொல்லைக்கு உடனடி தீர்வு! பக்க விளைவு இல்லாத வீட்டு மருந்து!

0

தீராத சளி தொல்லைக்கு உடனடி தீர்வு! பக்க விளைவு இல்லாத வீட்டு மருந்து!

சளியும் இருமல் தொண்டைவலியும் வந்துவிட்டால் நம்ம பாடு ரொம்ப கஸ்டம். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து அவை காய்ச்சலாகவும் மாறிவிடும். இவை பொதுவாகவே பருவநிலை மாறும்போது வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே சளி, இருமல் ஏற்பட்டால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டெழுவதற்கான வழிமுறைகளை நோக்குவோம்.

வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்கம் போது தொண்டைவலி நீங்குவதுடன், அது தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைப்பதுடன், தொண்டை உறுத்தலையும் நீக்கி சளியையும் குறைக்கும்.

வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டதாக உள்ளதனால் வெங்காயம் சளி, இருமலுக்கு மிகவும் சிறந்த ஒரு மருந்தாக காணப்படுகின்றது. எனவே ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தேன் சேர்த்து சூடு ஆறிய பின்னர் குடித்து வரும் போது சளி மற்றும் இருமல் நீங்கும்.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிதளவான உப்பினைத் தூவி இவ்வாறு உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லும் போது வறண்ட இருமலை நீங்கும். இங்கு இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி மற்றும் இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

சளி, இருமலைப் போக்கும் இனிப்பான மிட்டாய்களை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஒரு சிறிய துண்டு இஞ்சியைச் சாறாகப் பிழிந்து, வறுத்து பொடியாக்கிய சிறிதளவு கருமிளகுடன் சிறிதளவு மஞ்சள், தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் மாதிரி தயாரித்து அதனை பந்து போல உருட்டி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை 10 முதல் 15 நிமிடங்களுக்கு இதை வாயிலேயே வைத்திருந்து பின் விழுங்கிவிடுவதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களுடன் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிச் சேர்த்து அப்பூண்டைப் பொரித்து அதன் சூடு ஆறுவதற்குள் சாப்பிடுதல் இல்லது பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் சாப்பிடும் போது சளி அல்லது இருமல் நீங்கும்.

ஒரு வாணலியில் 100 மி.லி தேனை ஊற்றி, அதன் அடர்த்தி குறைகிற வரை சூடாக்கி அதனுடன் சிறிதளவான எலுமிச்சைச் சாறு மற்றும் லவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்திவரும் போது சளி குறைவடையும்.

சிறிதளவான ஆளி விதையினை நீரில் நன்கு கொதிக்கவைத்து அது பசை போல மாறியதும் அதனுடன் இயற்கை ஆன்டிபயாடிக்குகளான (Antibiotics) எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துப் பருகிவரும் போது தொண்டை வீக்கம் குறைவடையும்.

சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகும் போது சளி நீங்கும். இம்மஞ்சள் பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக காணப்படுவதனால் சளி பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.

ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு மேசைக்கரண்டி தேன் மற்றும் சிறிதளவான கருமிளகு சேர்த்து 15 நிமிடங்கள் மூடிவைத்து பின்னர் குடித்து வரும் போது இருமல், சளி மற்றும் தொண்டைவலி போன்றன நீங்கும்.

வெந்நீர் தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன், சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் செய்வதனால் சளி, இருமல் வந்துவிட்டால் சுட்டாறிய தண்ணீiர் குடிப்பது நல்லது. எனவே, சளி வந்தால் வெந்நீர் அருந்தவேண்டியது கட்டாய தேவையாக உள்ளதுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஒன்றையும் பின்பற்றினால் சளியும் இருமலும் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும் என்பது உறுதி.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநம்ப முடியாத வகையில் தொப்பையை கரைக்கும் விக்ஸ் வியக்க வைக்கும் விக்ஸின் பயன்கள்!
Next articleஇரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிடும் அற்புத கனி நெல்லி !