சமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்!

0

உங்கள் சமையல் அறையில் கெட்ட நாற்றம் வருகின்றதா? இதனை தீர்க்க இதோ சில வழிகள். இந்த வழிகளைப் பின்பற்றுவதால் இனிய நறுமணம் வீடு முழுக்க பரவுவ‌தை நீங்கள் உணர முடியும்.

ஆரஞ்சு தோல் தண்ணீர் : ஒரு பாத்திரத்தில் தண்ணீா் விட்டு அதில் ஆரஞ்சு தோலை போட்டு கொதிக்க விட வேண்டும். அதில் லவங்கம் ஏலக்காயும் சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும் . இதனை வீட்டின் நடுவில் வைத்தால் துர்நாற்றம் நீங்கும்.

வினிகர் : வினிகரும் நாற்றத்தை போக்கும் ஒரு சிறந்த ஒரு பொருள். அதிலும் வெள்ளை வினிகரில் ஒரு துண்டு லவங்க பட்டயை போட்டு வையுங்கள். இது மிகவும் சிறந்த நறுமணம் கொடுக்கும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்களை வைத்து கெட்ட நாற்றத்தை போக்க முடியும். உலந்த மலர் மற்றும் மசாலாக் கலவைகளைக் கொண்டு வாசனையை ஏற்படுத்த முடியும்.

எலுமிச்சை தண்ணீர் :ஆரஞ்சு தோல் தண்ணீர் பயன் படுத்துவதை போல் எருமிச்சையினை 4 துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் இட்டு நீா்விட்டு கொதிக்க விட வேண்டும். இதிலிருந்து நல்ல வாசனை வருவதை உணரலாம், மேலும் குளிர்சாதனப்பெட்டியில் (fridge) நாற்றம் வீசினாலும் ஆறிய பின்னா் ஒரு 10நிமிடம் வைத்து எடுத்தால் நாற்றமும் பக்டீறியாவும் இருந்த‌ இடம் தெரியாமல் சென்று விடும்.

சர்க்கரை சோப்பு : மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுக‌ளை சமைத்தால் கையில் நாற்றம் போகாமல் இருக்கும் இதற்கு சர்க்கரை தான் சிறந்த மருந்து. கையை கழுவுவதற்கு முன் சக்கரையை கொண்டு கழுவ வேண்டும். இதனால் மணம் போய்விடும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆட்டுப்பாலில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்று தெரிந்துகொள்ளுங்கள்! தீரும் நோய்கள்!
Next article10 வினாடிகளில் மிகவும் சுலபமாக பூண்டு உரிப்பது எப்படி?