வேதனை தரும் ‘புதையுண்ட நகம்’ – நகம் வெட்டுவதில் அவதானம் தேவை!

0

நகக் கரை ஓரமாகப் புண். நீண்ட காலமாக இருக்கிறது. அருகில் எங்கோ மருந்து கட்டிக் கொண்டு திரிகிறார்.

புண்ணும் மாறவில்லை வேதனையும் குறையவில்லை புண்ணில் சதைவளர்ந்து நக ஓரத்தை மூடிக் கிடக்கிறது
உற்றுப் பார்த்தால் நோயுற்ற பகுதியில் உள்ள நகத்தின் நுனிப் பகுதி சதைக்குள் ஆழப் புதைந்து கிடப்பது தெரியும்.

மாறாக, நகத்தின் மறு கரை ஓரத்தை அவர் சற்று ஆழமாக வெட்டியிருப்பதை அவதானித்து இருப்பீர்கள். ஆனால் நல்ல காலமாக அது புண்படவில்லை.

நகத்தின் நுனியானது சதைக்குள் புதையுண்டு கிடந்து, அதன் மேல் தசை வளர்வதையே புதையுண்ட நகம் (Ingrown Toe nail) என்று சொல்லுவார்கள்.

இது ஏன் ஏற்படுகிறது?

முக்கிய காரணம் நகங்களை சரியான முறையில் வெட்டாமைதான்.

நகத்தின் ஓரங்களை நேராக வெட்டாமல் பிறை போல வளைத்து வெட்டும்போது நக ஓரத்தில் உள்ள சதையும் வெட்டுப்படும் அபாயம் உண்டு.

அவ்வாறு வெட்டினால் நகமானது வெளி நோக்கி வளராது தசைப் பகுதியை ஊடுறுத்து வளர முயல்வதால்தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

நுனிப் பகுதியில் இறுக்கமான சப்பாத்துக்களை அணிவதும்,. குதி உயர்ந்த சப்பாத்துக்களை அணிவதும் காரணமாகலாம்.

அடிக்கடி விரல் நுனியில் காயங்கள் ஏற்படுவதும் காரணமாகலாம். உதாரணமாக கால்பந்து விளையாட்டின் போது அவ்வாறான காயங்கள் ஏற்படுவதுண்டு.

என்னிடம் வந்த ஒரு நோயளி தனது கவலையீனம் காரணமாக தனது விரல் நுனியை மேசை கதிரைகளில் அடிபடவி ட்ட காயங்களால் தான்அவ்வாறு ஆனது என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் வருவதும் அவதானிக்ப்பட்டுள்ளது.

இது பரம்பரை நோயல்ல. அவர்களது விரல் எலும் பு நகம் ஆகியவற்றின் வளைவு சற்று அதிகமாக இருப்பது காரணம் என நம்பப்படுகிறது.

இவ்வாறு நகம் புதையுண்டு போனால் வெறுமனே மருந்து கட்டுவதாலோ அன்ரிபயோடிக் மருந்துகளை உபயோகிப்பதாலோ சுகம் கிடைக்காது.

விரலை மரக்கச் செய்வதற்கு ஊசி போட்டு சதை வளர்ந்துள்ள பகுதியில் உள்ள நகத்தை வெட்டி எடுத்துவிட்டு மருந்து கட்டுவார்கள். முழு நகத்தையும் அகற்ற வேண்டிய தேவை இல்லை.

நகத்தின் அப் பகுதி மீண்டும் வளர்ந்து வரும் போது மீண்டும் நகம் பாதிப்பு அடையாமல் இருக்குமாறு கவனமாக இருங்கள்.

நகம் வெட்டும்போது வளைத்து வெட்டி நகக் கரையோர விரல் நுனி காயமடையாமல் பாதுகாப்பாக வெட்ட வேண்டும். அதாவது நகத்தை வளைத்து வெட்டாமல் நேராக வெட்டுங்கள்.
நுனிப் பகுதி இறுக்கமாக சப்பாத்து அணிய வேண்டாம்.
குதி உயர்ந்ததும் வேண்டாம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள்!
Next articleநாடி ஜோதிடம்: இதன் ரகசிய உண்மைகள் தெரியுமா?