நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் சாப்பிடாதீர்கள்!

0

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளையான உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுவும் மைதாமாவு, சர்க்கரை, கார்போஹைடிரேட் அதிகம் உள்ள வெள்ளை நிற உணவுகள் ஆகியவை நீரிழிவு நோயளிகளுக்கு எதிரானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மைதா
கோதுமையில் உள்ள நார்ச்சத்துக்களை பிரித்து எடுத்து அதனுடன் பென்சாயில் பெராக்ஸைடு எனும் வேதிப்பொருள் சேர்த்து பளிச்சென்று வெள்ளை நிறமுள்ள மாவாக மைதாவை மாற்றுகின்றனர்.

அதை தொடர்ந்து அலெக்ஸான் எனும் மற்றொரு வேதிப்பொருள் கலந்து மாவை மிருதுவாக்கி மைதாவாக மாற்றப்படுகிறது.

இந்த இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை ஏற்படுத்தக் கூடியது. எனவே இத்தகைய மைதாவை சாப்பிடுவதால் அது நம் உடலில் இன்சுலின் சுரப்பை பாதிக்க செய்து நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை
மைதா மாவை போன்றே சர்க்கரையின் பழுப்பு நிறத்தை மாற்றுவதற்காக பலவித ரசாயனங்களை சேர்த்து சுத்திகரித்து வெள்ளையாக மாற்றுகின்றனர்.

பால் பொருட்கள்
வெண்மை நிறமுடைய பால் பொருட்களான வெண்ணெய், சீஸ், கிரீம் சீஸ் போன்றவறையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்த்து விடுவது நல்லது.

பழங்கள்
மாம்பழம், திராட்சை, சீதாப்பழம், ஸ்டரா பெர்ரீஸ், பேரிச்சை, ஆலிவ், உலர்பழங்கள், கொட்டைகள் போன்ற பழங்கள் அனைத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்

எனவே இது போன்ற பழங்களை தவிர்த்தால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

குறிப்பு
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நீராவியில் வேகவைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதை தவிர வறுத்த, பொறித்த மற்றும் பாக்கெட் உணவுப் பொருட்களை சாப்பிடவே கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதோ சூப்பரான பானம்! 7 நாட்களில் 5 கிலோ குறைக்க வேண்டுமா?
Next articleதினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்! என்ன நடக்கும் தெரியுமா?