கொழுப்பை குறைத்து, நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமிக்க எண்ணெய்!

0

இந்த அவகேடா மத்திய தரைக்கடல் பகுதியில் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. இது பார்ப்பதற்கு பேரிக்காய் போன்று வெளிப்புற பகுதி பச்சை நிறமாகவும், உள்ளே சதைப் பற்றுடனும் சுவையாகவும் இருக்கும். இந்த அவகேடா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் பொதிந்துள்ளன.

நீங்கள் வாரத்திற்கு ஒரு அவகேடா பழம் சாப்பிட்டால் போதும் உங்கள் சருமம் புத்துயிர் பெறும், உங்கள் இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் உடலில் உள்ள ஹார்மோன்கள் அனைத்தும் சமநிலையில் செயல்படும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் அதற்கும் இந்த அவகேடா பழம் மிகச் சிறந்தது. நீங்கள் சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் இந்த அவகேடா பழத்தை சாப்பிடும் வந்தால் போதும் நிறைய கிலோக்களை குறைக்க முடியும்.

இது ஒரு சாதாரண பழம் மட்டுமல்ல. இதிலிருந்து கிடைக்கும் எண்ணெய்யில் 77% வரை அதன் ஊட்டச்சத்துக்கள் முழுவதும் அடங்கியுள்ளது. எனவே இந்த எண்ணெய் உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

சரி வாங்க அவகேடா எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அவகேடா எண்ணெய்யில் அதிகளவு மேனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் அடங்கியுள்ளது. இது நாம் சமையல் மற்றும் பராமரிப்புக்கு பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய் போன்றது. அதே மாதிரி இந்த அவகேடா எண்ணெய்யையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் இந்த எண்ணெய்யில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவைநோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் நோய்களை சரி செய்கிறது. புற்று நோய் வருவதை தடுக்கிறது, காயங்களை ஆற்றுகிறது, புதிய செல்கள் உருவாக்கத்தை அதிகரிக்கிறது, உடலினுள் மற்றும் வெளியே ஏற்படும் அலற்சி யை தடுக்கிறது. மைக்ரோபியல் தொற்றிலிருந்து நமது உடலை காக்கிறது.

இதைத் தவிர இந்த ஒலீயிக் அமிலம் ஆக்ஸிடேஷன் செயல்பாட்டை தடுக்கிறது அதாவது மற்ற எண்ணெய்யில் சமைக்கப்படும் உணவு சீக்கிரம் கெட்டு போய்விடும். ஆனால் இந்த எண்ணெய்யில் தயாரிக்கப்படும் உணவு நீண்ட நேரம் கெடாமல் அப்படியே இருக்கும். மேலும் அதிக வெப்பநிலையில் சமைக்கும் போதோ பொரிக்கும் போதோ இதன் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.

அவகேடா எண்ணெய்யில் அதிகளவு பீட்டா சைடோஸ்டெரோல் உள்ளது. இவற்றில் அதிக அளவு உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு உள்ளது.

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் இயற்கையாகவே இரத்த குழாய் தமனிகளின் சுவரை பாதுகாக்கிறது. மேலும் இரத்த குழாய்களில் தங்கும் கெட்ட கொழுப்புகளை அகற்றி இதய நோய்கள் வராமல் காக்கிறது. அதே நேரத்தில் நமது இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

அவகேடா எண்ணெய்யில் அதிகளவு விட்டமின் ஈ உள்ளது. இவை நமது சருமத்திற்கும் கண்ணிற்கும் நல்லது. சருமத்தில் உள்ள பிரச்சினைகள், சரும செல்கள் புதுப்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கிறது.

இந்த விட்டமின் ஆயில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. நினைவாற்றல், மூளையின் செயல்திறன் போன்றவற்றை அதிகரிக்கிறது. மேலும் சீரண சக்தியை அதிகரிக்கிறது.

நீங்கள் சீரண மண்டலத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருந்தால் அதற்கு அவகேடா ஆயில் மிகவும் சிறந்தது. நீங்கள் உங்கள் தினசரி உணவில் அவகேடா எண்ணெய்யை சேர்த்து கொண்டு வந்தால் வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை, சீரணமின்மை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். இதிலுள்ள மோனோசேச்சுரேட் கொழுப்பு அமிலம் உணவு எளிதாக சீரணிக்க உதவுகிறது.

இதை ஒரு தடவை எடுத்து கொண்டால் மட்டும் மாற்றம் நிகழாது. தினசரி பழக்கத்திற்கு பயன்படுத்தும் போது உங்கள் உடல் எடையை கூட குறைத்து விடலாம்.

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால் அதற்கு அவகேடா ஆயில் மிகவும் சிறந்தது. இதிலுள்ள ஒலீயிக் அமிலம் உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. உங்கள் தினசரி உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியுடன் இதையும் நீங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக ஸ்லிம் ஆக மாறுவது நிச்சயம்.

இந்த எண்ணெய் பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்கும். இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி சீரண சக்தியை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. இதை சமையலில் மற்றும் சாலட் போன்றவற்றில் வெஜ்ஜூஸ் மற்றும் வினிகர் சேர்த்து பயன்படுத்தலாம்.

இந்த அவகேடா எண்ணெய் நமது உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. இதிலுள்ள இயற்கையான மக்னீசியமான குளோரோபைல் என்ற பொருள் நமது உடலில் உள்ள நச்சு தாதுக்களை வெளியேற்றுகிறது. காரீயம் மற்றும் மெர்குரி போன்ற நச்சு தாதுக்களை நமது மூளை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளில் இருந்து அகற்றுகிறது.

குளோரோபைல் மூலக்கூறுகள் நமது உடலுக்கு வந்ததும் மக்னீசியம் தாதுக்களை வெளியேற்றி ஒரு வேதியியல் இணைப்பை உருவாக்கி நச்சு தாதுக்களை மலம் வழியாக வெளியேற்றி விடுகிறது. இதை சமையலிலோ அல்லது சாலட் போன்றவற்றில் சேர்த்து உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடலாம்.

உங்களுக்கு மென்மையான பொலிவான சருமம் வேண்டுமென்றால் அதற்கு அவகேடா எண்ணெய் ஒரு சிறந்த பலனை தரும். இந்த எண்ணெய்யில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உங்கள் சருமத்தை பளபளப்பாக்கி ஜொலிக்க வைக்கும். தினமும் இந்த எண்ணெய்யை மாய்ஸ்சரைசர் மாதிரி உங்கள் உடலில் தடவி வந்தால் நல்ல ஆரோக்கியமான சரும செல்களை பெற முடியும்.

இதில் பொட்டாசியம், லெசிதின், விட்டமின் ஈ போன்றவை உள்ளன. இந்த எண்ணெய்யை சருமத்தில் தடவும் போது அப்படியே சரும உள் அடுக்களில் ஊடுருவி புதிய செல்களை உருவாக்குகிறது. மேலும் ஏற்கனவே உள்ள சரும செல்களை பாதுகாக்கவும் செய்கிறது.

அவகேடா எண்ணெய் உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல உங்கள் கூந்தலுக்கு ம் சிறந்தது. இதில் பொட்டாசியம், லெசிதின், விட்டமின் ஈ போன்றவை கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு மென்மையாக்குகிறது. வாரத்திற்கு ஒரு முறை முடியை அலசும் போது சில சொட்டுகள் அவகேடா எண்ணெய்யை தலையில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாறும். முடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும். புதிய முடி வளர்ச்சியும் தொடங்கும்

அவகேடா எண்ணெய் சூரியனால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பு, பூச்சு கடி, பொடுகு, எக்ஸிமா, சோரியாஸிஸ், வெடிப்பு, கெரட்டோஸிஸ், பில்லரிஸ் போன்ற அழற்சி பிரச்சினைகளையும் சரி செய்கிறது. இதிலுள்ள மேனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலத்தை சருமத்தில் தடவும் போது நல்ல பலனை கொடுக்கும்.

இதன் அடர்த்தியால் சருமத்தின் அடுக்குகளில் நீண்ட நேரம் நிலைத்து இருக்கும். ஆனால் பயன்படுத்துவதற்கு முன் ஒரு சில துளிகளை உங்கள் சருமத்தில் தடவி உங்களுக்கு ஒத்துக் கொள்ளுகிறதா என்று பரிசோதனை செய்து விட்டு பயன்படுத்துவது நல்லது.

அவகேடா எண்ணெய்யை உங்கள் காய்களில் தடவும் போது விரைவில் குணமடையும். இவை உங்கள் சருமத்தை வலுவாக்கி பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்துகிறது. காயங்கள் ஏற்பட்ட இடத்தில் இந்த அவகேடா எண்ணெய்யை தினமும் தடவும் போது சீக்கிரம் காயங்கள் குணமாகும். இவை சருமத்திற்கு எந்த வித பெரிய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

இதிலுள்ள மேனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலத்தால் நமது சருமம், உடலுக்கு வெளியே மற்றும் உள்ளே என்று ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அவகேடா எண்ணெய் அள்ளித் தருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரவில் உங்களுக்கு சரியா தூக்கம் வரலயா? அப்ப இதை நாக்குக்கு அடில வையுங்க போதும்!
Next articleயாருக்கெல்லாம் கார்டியாக் அரெஸ்ட் வர வாய்ப்புள்ளது தெரியுமா?