கொழுப்பைக் விரைவாக கரைக்கும் தேநீர்? எத்தனை முறை பருகலாம்? தலை முதல் பாதம் வரை அதிசயம்!

0

தற்பொழுது உடல் எடை குறைப்பு என்றாலே, கிரீன் டீ தான் என்று குதிரைக்கு கடிவாளம் போட்டது போல், அதையே பின்பற்றி கொண்டிருக்கிறோம். ஆனால், கிரீன் டீயை விட மிக விரைவாக உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை குறைத்து, பல்வேறு நோய்களையும் குணப்படுத்த உதவும் ஓர் அருமையான தேநீர் குறித்து இன்னமும் நாம் அறியாமல் இருக்கிறோம்.

இத்துணை பயன்கள் அளிக்கும் அந்த தேநீர் எது? ஒரு நாளைக்கு எத்தனை முறை பருகுவது? இதன் மருத்துவ பயன்கள் பற்றி காணலாம்.

அற்புத தேநீர் எது?
உடலின் தலை முதல் பாதம் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய அந்த அற்புத தேநீர் – ஊலாங் தேநீர்.

இது ஒரு சைனா டீ மற்றும் இது கேமில்லியா சினென்சிஸ் எனும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த தாவரத்தில் இருந்து தான் கிரீன் மற்றும் பிளாக் டீக்களும் தயாரிக்கப்படுகின்றன.

இதை பெரும்பாலும் சைனா மற்றும் தைவானில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

எத்தனை முறை பருகலாம்?
இந்த ஊலாங் டீயை ஒரு நாளைக்கு 2-3 முறை பருகலாம். புதிதாக இந்த டீயை பருக தொடங்குபவர்கள் ஒருமுறை உங்கள் உடல் தன்மைக்கு இந்த டீ பொருந்துமா என மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு பருகலாம்.

உடல் பருமன்
இந்த தேநீரை தொடர்ந்து பருகி வருதல், உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இத்தேநீரை தொடர்ந்து 6 வாரம் பருகுவது நல்ல பலனை அளிக்கும். உங்கள் உடலை ஸ்லிம்மாக, ஆரோக்கிய அழகு தேகமாக மாற்ற இந்த டீ உதவுகிறது.

10 மருத்துவ குணங்கள்!
ஊலாங் டீயை பருகுவதால், ஏற்படும் நன்மைகள், இந்த தேநீர் குணப்படுத்தும் – தடுக்கும் நோய்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

1. இதய நோய்கள்,

2. உடல் பருமன்

3. புற்றுநோய்,

4. நீரிழிவு நோய்

5. வீக்கம்

6. மூளை ஆரோக்கியம்

7. எலும்புகளின் பலம்

8. தோல் ஆரோக்கியம்

9. செரிமானம்

10. கூந்தல் ஆரோக்கியம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகர் சங்கத்தையே மிரட்டியுள்ள ஸ்ரீரெட்டி- எல்லை மீறுகிறாரா?
Next article24.07.2018 இன்றைய ராசிப்பலன் – செவ்வாய்க்கிழமை !