கொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தொற்றிக்கொண்டால் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? மருத்துவர்களின் புதிய தகவல்! அவதானம் மக்களே!

0

உலகளாவிய ரீதியில் நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் உயிரிழப்புக்கள் அதிகமாகி வருகின்றது. அரசுகள் மற்றும் சுகாதார தாபனங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் எடுத்து வரும் நிலையில், தற்போது பல நாடுகளில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால் அவரது உடலில் அது எவ்வளவு நாட்கள் உயிருடன் இருக்கும்? என்ற புதிய தகவல் ஒன்றை சீன மருத்துவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஆம் கொரோனா ஒருவரை பாதித்தால் அவரிடம் குறைந்தபட்சம் 37 நாட்கள் அது வீரியத்துடன் இருக்கும் என்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் 20 நாட்களுக்கு பிறகு தான் அதன் அறிகுறி வெளியில் தெரியும். அதன் பிறகு 20 நாட்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் தாக்கத்துக்குள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் அந்த காய்ச்சலில் இருந்து மீண்டுவருவதற்கு சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

கொரோனாவை குணப்படுத்திய பிறகும் சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2 வாரங்களுக்கு கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மக்களே நீங்கள் உங்களை பாதுகாத்து கொள்வதோடு ஏனைய உங்கள் உறவுகளையும் பாதுகாருங்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி!செய்முறை விளக்கம்!
Next articleஸ்ரீலங்காவில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!