கூகுள் நிறுவனத்தின் முக்கியஸ்தர் ராஜன் ஆனந்தன் திடீர் ராஜினாமா!

0

கூகுள் இந்தியாவின் நிர்வாக இயகுநர் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ராஜன் ஆனந்தன் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகி இருக்கிறாராம்.

கடந்த 8 ஆண்டுகளாக ராஜன் ஆனந்தன் கூகுள் நிறுவனத்திலேயே பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சிகுயா (Sequoia) கேப்பிட்டல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி ஏற்க இருக்கிறாராம். இது ஒரு வெஞ்சர் கேப்பிட்டலிஸ்ட் ஃபண்ட் நிறுவனம்.

சுருக்கமாக நல்ல முதலீட்டு திட்டங்கள் மற்றும் நல்ல ஸ்டார்ட் அப் பிசினஸ்களில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் நிறுவனம்.

ராஜன் ஆனந்தன் தான் கூகுள் இந்தியா நிறுவன செயல்பாட்டின் தலைவராக இருந்து வந்தவர். ஏப்ரல் 30, 2019 வரை ராஜன் ஆனந்தன் கூகுள் நிறுவனத்திலேயே இருப்பார்.

கூகுள் இந்தியா நிறுவனத்திற்கு புதிய நிர்வாக இயக்குனர் வரும் வரை கூகுள் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் இயக்குனராக இருக்கும் விகாஸ் தற்காலிகமாக கூகுள் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருப்பாராம்.

ராஜன் ஆனந்தனைப் பற்றி கூகுள் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய தலைவர் சொல்லும் போது “கடந்த 8 ஆண்டுகளில் ராஜன் ஆனந்தன் கூகுள் இந்தியாவிற்கு கொடுத்து பங்களிப்புகளுக்கு நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

ராஜன் ஆனந்தனின் தொழில் முனைவோருக்கான அந்த உற்சாகமும் தலைமைப் பொறுப்பும் இந்தியாவிலும் தெற்காசிய பிராந்தியத்தில் இணைய சூழலை பெரிய அளவில் வளர்ந்து எடுத்திருக்கிறது.

ராஜன் ஆனந்தன் மென்மேலும் வளர google அவரை வாழ்த்தி வழியனுப்புகிறது” என பாராட்டி இருக்கிறார்கள்.

ராஜன் ஆனந்தன் 2010 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேரும் முன்பு மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன் டெல் இந்தியா (Dell India), மெக்கன்சி அண்ட் கம்பெனி (McKinsey & Company) என பல்வேறு பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அதோடு ராஜன் ஆனந்தன் இன்றுவரை பல்வேறு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். Dunzo, Rapido, Capillary Technologies, Instamojo, Lets venture போன்றவைகள் ராஜன் ஆனந்தன் முதலீடு செய்திருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

ராஜன் ஆனந்தனைக் குறித்து கேப்பிடல் நிறுவனம் இப்படி சொல்கிறது “ராஜன் ஆனந்தனுக்கு டெக்னாலஜி துறையில் இருக்கும் ஆழ்ந்த அறிவு, ஒரு நிறுவனத்தை நடத்த தேவையான நிபுணத்துவம், இதற்கு முன் பல்வேறு டெக்னாலஜி சார்ந்த கம்பெனிகளில் பல்வேறு பிராந்தியங்களில் பிசினஸை வளர்த்துக் காட்டிய சாதனைகள் போன்றவைகளால் Sequoia கேப்பிட்டல் நிறுவனத்தையும் வளர்த்தெடுப்பார் என்கிறார்கள். வாழ்த்துக்கள் ராஜன் ஆனந்தன்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவைரலான நடிகை குஷ்புவின் கவர்ச்சி புகைப்படம்! ரசிகர் கேட்ட கேள்வி!
Next articleகாதலித்து ஏமாற்றிய காதலன்! காத்திருந்து பழிவாங்கிய பிரபல நடிகை!