குழந்தை பிறந்தபின் தொப்பையை குறைப்பது எப்படி?

0

கர்ப்பகாலத்தில் அனைத்து உறுப்புகளுக்கும் செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதயம் வேகமாகத் துடிக்கும். மார்பகங்கள் பெரிதாகும். கர்ப்பப்பை விரிவடையும். கர்ப்பக்காலத்தில் வயிறு பெரிதாவதால் வயிற்றுப்பகுதி சருமத்தில் கோடுகள் (Stretch marks) ஏற்படும். முகம், கழுத்து, வயிற்றுப்பகுதிகளில் கரும்புள்ளிகள் உருவாகும். வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். பிரசவம் முடிந்து அடுத்த 6 மாதங்களில் தாயின் உடல் உறுப்புகளிலும் செயல்பாடுகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இயல்பாகவே, கர்ப்பம் அடைவதற்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்புவதே இயற்கை.

தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பு பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். சராசரியாக அதிகரிக்கும் 12 கிலோ எடையில், தாயின் உடலில் சேரும் கொழுப்புச்சத்து சுமார் 3 முதல் 3.5 கிலோ வரை இருக்கிறது. மீதமிருக்கும் சுமார் 9 கிலோ(குழந்தையும் சேர்த்து) பிரசவத்தின்போதும், பிரசவத்துக்குப் பின் வரும் நாட்களிலும் குறைந்துவிடும். வயிற்றுப்பகுதி 10 மாதங்களாக விரிவடைந்து, பிரசவத்துக்குப் பின் தளர்ந்துபோக, அங்கு எளிதில் கொழுப்புச்சத்து சேர்ந்து பிரசவத்துக்குப் பிறகு தாய்மார்களுக்கு வயிறு பெரிதாகி தொப்பை ஏற்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களே! உங்க மார்பகம் குட்டியா இருக்கா? இதோ அதை பெரிதாக்க வழி !
Next articleஇன்றைய ராசிபலன் 8.7.2018 ஞாயிற்றுக்கிழமை !