குளுக்கோஸ்க்கு பதிலாக 15 பீர்களை நோயாளியின் உடலில் ஏற்றிய மருத்துவர்கள் என்ன காரணம்?

0

குளுக்கோஸ் பாட்டில் ஏற்றி தான் பொதுவாக மருத்துவமனையில் உயிரை காப்பற்றுவர். ஆனால் இங்கு நபர் ஒருவருக்கு 15 பீர் பாட்டிலை உடலில் செலுத்தி உயிரை காப்பாற்றி உள்ளனர். இது மருத்துவ துறையில் புதுவித அனுபவம் என்றே கூறலாம்.

வியட்நாம் நாட்டை சேர்ந்த நகுய் வான் நாட் என்கிற 48 வயதை நிரம்பிய ஒருவருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் 15 பீர் பாட்டிலை செலுத்தி தான் உயிரை மீட்டெடுத்தனர்.

காரணம்..

நாட் என்பவரின் ரத்தத்தில் அதிக அளவு மெத்தனால் (methanol) என்கிற வேதி பொருள் கலந்துள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்சு சிகிச்சை எடுத்துவந்துள்ளார்.

இதன் அளவு 1119 மடங்கு அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்த நிலை கொஞ்சம் நேரம் நீடித்தால் கூட அவருக்கு மரணம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

இதை சரி செய்வதற்கான வழி முறையை ஆராய்ந்தார்கள். அப்போது தான் இவர்களுக்கு பீர் உதவியது. ஆரம்பத்தில் 1 லிட்டர் பீரை அவரின் உடலில் மருத்துவர்கள் செலுத்தினர். இருப்பினும் இந்த வேதி பொருளின் அளவு குறையவில்லை.

இதனால் ஒவ்வொரு பீர் பாட்டிலையும் இவரின் உடலில் குளுக்கோஸ் ஏற்றுவது போல ஏற்றினர். 10 பீர் பாட்டிலை ஏற்றிய பின்னரும் இவர் சுய நினைவுக்கு வரவில்லை. இறுதியாக 15 ஆவது பீர் பாட்டிலில் தான் இவர் சுய நினைவுக்கு வந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமட்டக்களப்பில் தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்!
Next articleஇன்றைய ராசி பலன் – 25.01.2019 வெள்ளிக்கிழமை !