குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 சிம்மம்.

0

சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்
தைரியமும் துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, ஆண்டு கோளான குருபகவான் வாக்கிய கணிதப்படி 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் உங்களுக்கு ஏற்ற தாழ்வுடைய பலன்களையே உண்டாக்கும். குடும்ப ஒற்றுமையானது சுமாராகத்தான் இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலையும், சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகளுக்கு பின்பு நற்பலனை பெற முடியும். சனிபகவான் 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திரர்களாலும் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும்.

அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் பங்காளிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தற்போது 6-ல் கேது சஞ்சரிப்பதும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். குரு பார்வை 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்கு பின் தான் அமையும். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்தும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் பெரிய தொகைகளை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களும் நிறைய நெருக்கடிகள் போட்டி பொறாமைகள் போன்றவற்றை எதிர்கொண்டு ஏற்றம் பெறுவார்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் முயற்சிகளில் நற்பலனை பெற முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு உடல்நிலை சோர்வடையும். குடும்பத்தில் உள்ளவர்களும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற அலைச்சல்களும் டென்ஷன்களும் அதிகரிக்கும். அசையா சொத்துக்களால் வீண் கவலைகள் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்பு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகளால் அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். வீண் விரயங்கள் அதிகரிக்கும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமான தான் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய தடைகளுக்கு பின் தான் நல்லது நடக்கும். புத்திரர்களால் சிறுசிறு மனக்கவலைகள் ஏற்படும். அசையா சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை சற்று குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்கலாம்.

கமிஷன் ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராட் துறைகளில் இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சுமாரான நிலை இருக்கும் என்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எதிர்பாராத வகையில் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகளும் பொறாமைகளும் ஏற்படக்கூடிய காலமாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதால் தொழிலை விரிவு செய்யும் நோக்கத்தில் சற்று தேக்கம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் ஓரளவுக்கு உயர்வினை உண்டாக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளின் மூலம் வர வேண்டிய ஆடர்களின் எண்ணிக்கை சற்று குறையும். புதிய வாய்ப்புகள் கைநழுவும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்தியோகம்
பணியில் சற்று கெடுபிடிகள் அதிகரிக்கும். சில நேரங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் உயரதிகாரிகளின் ஏச்சிக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஒத்துழைப்புடன் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை பிரிய நேரிட்டாலும் அதன மூலம் ஓரளவுக்கு பொருளாதார உயர்வுகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை சரியாகி பயன்படுத்தி கொள்வது நல்லது. வேலைபளு அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.

அரசியல்
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுவது நல்லது. மக்களின் ஆதரவை பெற இதுவே சிறந்த முயற்சியாகும். பலவகையில் நெருக்கடிகள், எதிர்பாராத வீண் விரயங்கள், எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படக்கூடும். என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறக்கூடிய வாய்ப்புக்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் பழகுவது உத்தமம். மறைமுக வருவாய்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

விவசாயிகள்
விளைச்சல் சுமாராக இருந்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிட முடியும். பங்காளிகளிடையே ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் வீண்வம்பு வழக்குகளும் உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப் பின் கிட்டும். கால்நடைகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

கலைஞர்கள்
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வதும், உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுப்பதும் உத்தமம். வரவேண்டிய சம்பள பாக்கிகள் சற்று தாமதநிலை ஏற்படுவதால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவும். பத்திரிக்கை நண்பர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவதும், தேவையற்ற கிசு கிசுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அவ்வவ்போது ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளால் உடல் சோர்வு மந்த நிலைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படவே செயல்படுவீர்கள். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களை சமாளிப்பீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையா சொத்துகளால் சற்று அலைச்சல்கள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணிபுரியும் பெண்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் வேலையில் நிம்மதியான நிலை இருக்கும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட கூடும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவார்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு ஓரளவுக்கு வெற்றியினை பெறுவீர்கள். சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதில் மகிழ்ச்சி இருந்தாலும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்ப்பதும் உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகி மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்று விட கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வண்டி வாகணங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும்.

கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி 5-ல் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து விஷயங்களில் சில பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4- ல் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் தன, லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4- ல் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் சுமாரான அமைப்பே என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.

வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பது நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்புங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
குருபகவான் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் ஜென்ம ராசிக்கு 5-ல் அதிசாரமாக சஞ்சாரம் செய்வதாலும், ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.

5- ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமையும், நிம்மதியும் சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற நோக்கங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதும், 5-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் வீண் விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி விட முடியும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் சற்று தாமதநிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும்.

கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
குருபகவான் தன, லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4- ல் சஞ்சரிப்பதும், சனி 5-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.

உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது உத்தமம். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. சனி 5-ல் சஞ்சரிப்பதால் ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9 நிறம் – வெள்ளை, சிவப்பு கிழமை – ஞாயிறு, திங்கள்
கல் – மாணிக்கம் திசை – கிழக்கு தெய்வம் – சிவன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கடகம்.
Next articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – கன்னி.