கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு! பாதிரியார் உள்ளிட்ட ஆறு பேர் பலி! புர்கினா பசோவில் சம்பவம்!

0
437

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பசோ பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு பாதிரியார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேவாலயத்தில் ஆராதணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி ஏந்திய 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

கடந்த 5 வாரங்களில் இங்கு நடத்தப்படும் 3 ஆவது கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதல் இது என குறிப்பிடப்படுகின்றது.

Previous articleஅடிவயிற்று சதையை விரைவாக கரைக்க இந்த ஒரு பொருள் போதும்! நன்றாக வறுத்து சாப்பிடுங்கள்!
Next articleஐஎஸ் பயங்கரவாதிகளின் தலைவன் மறைந்திருக்கும் நாடு பற்றிய வெளியான தகவல்!