kaal nagam udaithal: கால் நகத்தின் ஓரம் உடைந்து விட்டதா? பொறுக்க முடியாத வலியாக உள்ளதா? கொஞ்சம் இத ட்ரைபண்ணிப் பாருங்க!

0

kaal nagam udaithal:கால் நகத்தின் ஓரம் உடைந்து விட்டதா? பொறுக்க முடியாத வலியாக உள்ளதா? கொஞ்சம் இத ட்ரைபண்ணிப் பாருங்க!

எம்மில் பலர் கைவிரல் நகங்களை பராமரிக்கும் அளவிற்கு கால் விரல் நகங்களை சரிவர் பராமரிப்பதில்லை. இதனால், எமது கால் நகங்களின் விரல்களில் அதிகளவான அழுக்குகள் படிந்து, சிலருக்கு நகங்கள் சொத்தையாக காணப்படுவதுடன், வேறு சிலருக்கு கால் நகங்களின் ஓரத்தில் நகம் துண்டாகி பயங்கர வேதனையை ஏற்படுத்தும். போதியளவான இடமின்றி சரியாக வளராத நகங்கள், சதைக்கு நெருக்கடியை உண்டாக்குவதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகின்றது. இவ்வாறாக, எமது நகங்களில் ஏற்படும் வலியை வீட்டிலேயே போக்குவது எவ்வாறு எனப் பார்ப்போம்.

பூண்டு :

ஒரு பல் பூண்டை நன்றாக தட்டி அதனுடன் ஒரு கரண்டி கற்றாழை ஜெல்லை கலந்து பாதத்திலுள்ள விரல்களில் தடவி வரும் போது ஓரிரு நாட்களில் சரியாகி, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

சமையல் சோடா :

சமையல் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து, இரவில் தூங்குவதற்கு முன்னர் வலியுள்ள பாத நகத்தில் பூசுவதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதோடு, நகத்தில் சொத்தை இருந்தால் கூட குணமாகிவிடும்.

தேயிலை மர எண்ணெய் :

ஒரு கரண்டி தேயிலை மர எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து நகத்தில் நேரடியாக தடவி வரும் போது நகத்திலுள்ள வீக்கம் நீங்குவதுடன், இது நகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் இத்தகைய முழுமையாக வளராத அதாவது பாதி வளர்ந்த நகங்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. எனவே, ஒரு கரண்டி எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால் கரண்டி தேன் கலந்து நகங்களில் தடவி வரும் போது அவை விரைவிலேயே நல்ல பலனைத் தரும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் வரலிலுள்ள வீக்கத்தைக் கட்டுப்ப்படுத்துவதுடன், கிருமிகளை நீக்கி விரலிலுள்ள வலியையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, தண்ணீரை நன்க கொதிக்க வைத்து அதில் ஒரு கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றி உங்கள் பாதங்களை அதில் நன்கு அமிழ்த்தி 20 நிமிடம் கழித்து கால்களை எடுக்கவும். இவ்வாறு தொடர்சியாக செய்து வரும் போது ஓரிரு நாட்களில் அது குணமாகிவிடும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள்!
Next articleநம்ப முடியாத வகையில் தொப்பையை கரைக்கும் விக்ஸ் வியக்க வைக்கும் விக்ஸின் பயன்கள்!