காலை உணவில் இஞ்சி சேர்க்கலாமா! சேர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா!

0

காலை உணவு என்பது எல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட உணவு நமது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பார்க்கையில் இஞ்சி ஒரு சிறந்த உணவாகும்.

ஒரு கப் தேநீரில் சிறுதளவு இஞ்சியை சேர்த்து குடிப்பதாலே ஏராளமான நன்மைகளை நாம் பெற இயலும். இப்படி தினமு‌ம் இஞ்சியை காலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் படியுங்கள்.

உங்கள் அதிகாலை காபிக்கு இன்னும் சுவையேற்றுங்கள். ஆமாங்க காபியில் இஞ்சி கலந்து குடிப்பது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக இது செயல்படுகிறது. ஒரு கப் காபியில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியைச் சேர்த்து குடிப்பதால் அதிகாலையிலயே உங்கள் சீரண மண்டலம் நன்றாக செயல்பட ஆரப்பிக்கிறது.

இந்த குளிர் காலங்களில் சூடான இஞ்சி டீ தொண்டைக்கு இதம் அளிப்பதோடு உங்கள் வயிற்றுக்கும் நல்லது. இந்த இஞ்சி டீயை அதிகாலையில் குடிக்கும் போது குமட்டல், மலம் கழிப்பதில் பிரச்சினைகள், கர்ப்ப கால அறிகுறிகள் போன்றவற்றை சரியாக்குகிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான விட்டமின் சி இதிலிருந்து கிடைக்கிறது.

இந்த இஞ்சி டீயை துருவிய இஞ்சியை கொண்டு 10 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி சுட வைத்து அதில் சுகர், டீ தூள் சேர்த்து தயாரித்தும் பருகலாம். பாலில் சேர்த்தும் பருகலாம்.
இஞ்சி ஜாம்
நீங்கள் இதுவரை உங்கள் காலை உணவு பிரட்டாக இருந்தால் ப்ரூட் ஜாம் தடவி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இஞ்சி ஜாம் கொண்டு சாப்பிட்டது உண்டா?

ஆனால் இந்த ஜாம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த இஞ்சி ஜாமை பிஸ்கட், பிரட் என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பிரட் வெண்ணெய் உடன் இஞ்சி துருவல் போட்டு சேர்த்து சாப்பிடலாம்.

இஞ்சி ஸ்மூத்தி
இஞ்சி ஜூஸூம் உங்கள் காலை வேளையை சிறப்பாக்கும் உணவாகும். இந்த இஞ்சி ஜூஸை குடிக்கும் போது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், பாக்டீரியாக்களை அழிக்கும், மாதவிடாய் கால வலி, உடற்பயிற்சியால் ஏற்படும் வலி போன்றவற்றை போக்குகிறது.
இஞ்சி உடம்புக்கு ஆற்றலை தரும் பொருளாகும். எனவே இந்த சூப்பர் உணவை காலை உணவில் சேர்த்து பயன் பெற வேண்டும்.
இஞ்சி நிறைய வடிவில் உணவில் சேர்க்கப்படுகிறது. இஞ்சி பிரட், இஞ்சி ஸ்னாப்ஸ், இஞ்சி கேக் போன்றவை நல்ல ஊட்டச்சத்துக்களை குழந்தைகளுக்கு வழங்குகிறது எனவே இஞ்சியை எதாவது ஒரு வடிவத்தில் காலை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉபவாச விரதங்களில் 27 வகையான உபவாச விரதங்கள் உள்ளன அவை எவை தெரியுமா!
Next articleவிலை குறைவாக கிடைக்கும் இந்த மீனை சாப்பிட்டால் நோய்கள் எல்லாம் 10 அடி தலை தெறிக்க ஓடும்! ஏன் தெரியுமா!