தினமும் 12 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்! என்ன நடக்கும் தெரியுமா?

0
1234

அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சனைகளுக்கு இயற்கையில் உள்ள மருத்துவங்கள் நல்ல பயனளிக்கும்.

அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும், உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ!

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும்.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது.

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒரு கோப்பை நீரில், கலந்து தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் உடல் எடை குறைவதைக் காணலாம்.

தினமும் காலையில் தொடர்ந்து 12 கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைத்து, அதற்கு பதிலாக, கோதுமையினால் செய்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

3 கப் தண்ணீருடன் வெற்றிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, அதனை சில நாட்களுக்கு குடித்து வந்தால், இருமல் பிரச்சனைகள் ஏற்படாது.

பல்வலி உள்ளவர்கள் துளசி இலை 2, சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால், உடனே வலி குறையும்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க, குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு தினமும் குளிக்க வேண்டும். இதனால் விரைவில் தழும்புகள் மறையும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு, நீருடன் தேனைக் கலந்து கொடுத்தால், விரைவில் இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும்.

காரட் மற்றும் தக்காளிச் சாறு ஆகியவற்றுடன், சிறிதளவு தேன் கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், உடல் வலிமையாகும்.

வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த, கொய்யா இலைகளை மென்று தின்றாலே போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Previous articleநீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் சாப்பிடாதீர்கள்!
Next articleமுகத்தில் அதிக தசை சேர்வதை தடுக்க இதையெல்லாம் அவசியம் செய்யுங்கள்!