இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!

0

இன்று நாம் எல்லோரும் எதிா் கொள்ளும் பிரச்சனை காய்ச்சல், சளி, தலைவலி இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகிக்கின்றோம். இதை சூப் உணவு மூலமாக எவ்வாறு சரி செய்வது என பாா்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தனியா – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு   – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 7
தண்ணீர் – 1250 ml
உப்பு – தேவையான அளவு

சூப் செய்முறை : ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட்டு மிதமான சூட்டில் கிளறவும். பின் ஒரு 15 நொடிகளில் சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு நன்கு கிளறவும்.

அதன் பின் தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 45 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

சூப் ரெடி : பின்னா் அந்த திரவத்தை தனியே எடுத்து, ஒரு வடிகட்டி மூலம் வடித்து அத்துடன் சிறிதளவு தேன் கலந்து மிதமான சூட்டுடன் குடித்தால் நல்ல பலனை தரும்.

இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:

மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
மொத்த கார்போ ஹைடிரேட்: 3%
மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
சோடியம்: 603 mg

இதனை காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு குடித்து வந்தால் காய்ச்சல் ,தலைவலி உடல் வலி, சளி ஆகியன பஞ்சாய் பறந்து விடும். குழந்தைகளுக்கும் ஏற்ற சூப்.

அனைவருக்கும் பகிருங்கள்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இயற்கை வைத்திய முறை!
Next articleதைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து!