சிலருக்கு காதுகளில் அடிக்கடி தொற்றுகள் ஏற்படும். அதிலும் குழந்தைகள் தான் காது பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். பொதுவாக காதுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால், மருத்துவரை உடனே அணுகும் போது, அவர் காதுகளுக்கான சொட்டு மருந்தைக் கொடுப்பார்.
ஆனால் இப்படி காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு பூண்டு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. இந்த பூண்டு சாற்றினை குழந்தைகளின் காதுகளிலும் விடலாம். இருந்தாலும், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
பூண்டு சாற்றின் இதர நன்மைகள்
பூண்டு சாறு காது பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுவதோடு, வேறு பல பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது. அதில் வயிற்று வலி, வாந்தி, குமட்டல், அரிப்பு, யோனியில் ஏற்படும் அரிப்புக்கள், வெள்ளைப்படுதல் மற்றும் இரத்தம் கலந்த மலப்பிரச்சனைக்கும் சிகிச்சை அளிக்க உதவும்.
இங்கு காதுகளில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய பூண்டு சாற்றினை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
ஆலிவ் ஆயில்
பூண்டு சாறு
பயன்படுத்தும் முறை:
ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும். இதனால் காதுகளில் தொற்றுக்கள் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் விரைவில் குணமாகும்.
சிறந்த நேரம்
இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்வது மிகவும் நல்லது. முக்கியமாக காதுகளில் இருந்து எண்ணெய் மற்றும் சாறு வெளியே வராமல் இருக்க, ஒரு பஞ்சுருண்டையை காதுகளில் வைத்து அடைத்துக் கொள்ளுங்கள்.