காதல் கணவர் தற்கொலைக்கு பின் மைனாவிற்கு இரண்டாவது திருமணமா! மாப்பிள்ளை இவர்தான்!

0
448

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்..

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இதற்கிடையில் கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்து வந்தது. இதனால் அவரது கணவர் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

ஆனால், நந்தினி அந்த நேரத்தில் ஒரு ஷோ’வில் லைவாக பேசிக்கொண்டு இருந்தார். கணவர் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவலை அறிந்தும் எந்தவிதமான ரியாக்சனும் காட்டவில்லை. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஸோ என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் நடிகை நந்தினியுடன் நடித்து வரும் நடன இயக்குனருடன் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. தற்போது தான் ஒரு சீரியல் நடிகரை காதலிப்பதாக வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறி நந்தினி உறுதிப்படுத்தியுள்ளார்.

Previous articleமர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன்! அச்சத்தில் பொதுமக்கள்!
Next articleதமிழீழ விடுதலைப் புலிகள் யாரையுமே தமிழ் மக்கள் காட்டிக் கொடுத்தார்களா!