Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal காதலை ஏற்க மறுத்த இளம்பெண்! முகநூலில் ஆபாசமாக புகைப்படத்தை பதிவிட்ட இளைஞர்!

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்! முகநூலில் ஆபாசமாக புகைப்படத்தை பதிவிட்ட இளைஞர்!

0
514

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுகாவில் அனகோடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கவுரிசங்கர்(28). இவரும், சூளகிரி அருகே உள்ள திராடி பகுதியைச் சேர்ந்த பெண்(24) ஒருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஒன்றாக வேலை பார்த்தனர்.

கவுரி சங்கர், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் அந்த பெண் அவருடைய காதலை ஏற்க மறுத்து விட்டார்.

கடந்த 3-ம் தேதி கவுரிசங்கர் திராடி பகுதியில் உள்ள அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்று திடீரென அவரது பெற்றோரிடம் பெண்கேட்டார். அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர், அந்த பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, அவரை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Previous articleகனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதியின் நெகிழ்ச்சி தருணம்!
Next articleசெந்திலின் ஆசையை நிறைவேற்றவே படு மார்டனாக மாறினேன்! உண்மையை அம்பலப்படுத்திய ராஜலட்சுமி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!