கள்ளக்காதல் ஜோடிகளுக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை! வலியால் கதறித்துடித்து! சுருண்டு விழுந்த சோகம்!

0

இந்தோனேசியா நாடுகளில் இஸ்லாமிய சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கு கள்ளக்காதல் மற்றும் ஓரினசேர்க்கை என்பது கடுமையான குற்றமாக கருதப்பட்டு, அதற்கு கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கள்ளக்காதல் மற்றும் ஓரினசேர்க்கை போன்ற குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களுக்கு பொதுமக்களின் முன்னிலையில் சவுக்கடி தண்டனையானது வழங்கப்டுவது வழக்கம்.

இந்தோனேசியாவில் இருக்கும் ஏக் மாகாணத்தில் சுமத்திரா தீவு பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூதாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்ற சம்பவத்தில் ஈடுபட்டாலும், அது குற்றத்தின் கீழ் சேர்க்கப்பட்டு சவுக்கடி தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வருடத்தில் அங்குள்ள பண்டா ஏக் நகரில் இருக்கும் விடுதியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில், சுமார் 6 கள்ளக்காதல் ஜோடிகளை கண்டறிந்தனர்.

கைதான 6 கள்ளக்காதல் ஜோடியில் இருந்த 12 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று பொதுமக்கள் முன்னிலையில், சவுக்கடி தண்டனையானது நிறைவேற்றப்பட்டது.

இந்த ஜோடிகளில் தலா 4 ஜோடிகளுக்கு சுமார் 7 சவுக்கடியும், 2 ஜோடிகளுக்கு 17 சவுக்கடியும் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் வலி தாங்க முடியாமல் இரண்டு பெண்கள் அங்கேயே கதறியழுது முடங்கினர்.

இந்த விஷயத்தை அலைபேசியில் பதிவு செய்த நபர்கள் இணையத்தில் பகிரவே, இந்த விஷயம் தொடர்பான பிரச்சனைக்கு பல கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாக்கிச் சட்டையில் இரவில் பொலிசார் அடித்த லூட்டி! தீயாய் பரவும் ரொமாண்ஸ் காட்சி!
Next articleபாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து மிரட்டிய இந்திய நீர்மூழ்கி கப்பல்! வெளிவரும் புதிய தகவல்!