கல்லீரலில் வெளியேற முடியாமல் தங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் அற்புத பானம்!

0

நாம் நம் வீட்டை சுத்தப்படுத்தாமலே இருந்தால் என்னாகும்? குப்பைகள் சேர்ந்து போகும். என்னதான் சுத்தமாக இருந்தாலும் தினமும் தூசிகள் வராமல் இருக்காது. அப்படிதான் நம் உடலுக்குள்ளும்.

நமது உறுப்புகளே தம்மைத்தாமே சுத்தப்படுத்திக் கொள்கிறது. இருந்தாலும் மது, ராசயனம் மற்றும் அதிக மசாலா கொண்ட உணவுகளை சாப்பிடும்போது, அவற்றின் நச்சுக்கள் அங்கேயே தங்கி, வெளியேறாமல் இருக்கும்போது அவற்றுடன் மல்லு கட்ட முடியாமல் கல்லீரல் சோர்ந்து போகிறது என்பது உண்மை.

கல்லீரல் மிகப்பெரிய மற்றும் மிக மிக முக்கிய உறுப்பு. அதோடு உடலில் மிக அதிகமான வேலைகளை கல்லீரல் மற்றும் சிறு நீரகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

ஜீரணத்தை செய்வது, வளர்சிதை மாற்றத்தை நடத்துவது, நச்சுக்களை வெளியேற்றுவது, ரத்தத்தை வடிகட்டி அனுப்புவது என பல்வேறு வேலைகலை இழுத்து போட்டு கல்லீரல் செய்கிறது.

இந்த நேரத்தில் அதற்கு அநாவசியமான வேலைகளையும் நாம் தருவது அதன் வேலைகளை பாதிப்படைய செய்யும். இதனால் கல்லீரலும் பாதிக்கும் நிலைமை உண்டாகும்.

ஆகவே கல்லீரலுக்கு மிகவும் உகந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். அது தவிர்த்து நீங்கள் நச்சுக்களை வெளியேற்ற உதவும் வகையில் உணவுகளை சாப்பிடுவதால் கல்லீரலுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அதன் வேலைகளை எளிமைப்படுத்துவதாகவும் அமையும்.

அவ்வாறு எளிமையான மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் ஒரு ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.

புதினா ஜூஸ் :
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
புதினா ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ஒரு கப் நிறைய வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, புதினா சாறு மற்றும் தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த மூன்றுமே நச்சுக்களை சிறு நீரகத்திற்கு அடித்துக் சென்று விடும்.

கல்லீரலில் உண்டாகும் பாதிப்பை சரிபடுத்தும். வீக்கங்களை குறைக்கும். வாரம் இரு நாட்கள் இப்படி குடித்து பாருங்கள். உங்களுக்கு பயனை தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடிவயிற்றில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம்!
Next articleஐந்தே நாட்களில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அற்புத பானம்! கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை!