சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஓமவல்லி கற்பூரவல்லி இலை சூப் தயாரிக்கும் முறை!

0

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஓமவல்லி (கற்பூரவல்லி) இலை சூப் தயாரிக்கும் முறை!

கற்பூரவல்லி இலை சூப்
கற்பூரவல்லி இலை சூப்

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை – 10,
ஓமம் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
தனியா – 2 டீஸ்பூன்,
மிளகு – 4 எண்ணிக்கை,
சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 4 பல்,
சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
வெற்றிலை – 4,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :

கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலில் சில உறுப்புகளை அகற்றினாலும் உயிர்வாழ முடியும் என்பது தெரியுமா!
Next article10.10.2018 இன்றைய ராசிப்பலன் – புரட்டாசி 24, புதன்கிழமை!