கருவளைய பிரச்சினைக்கான வீட்டு வைத்தியம்!

0
148

கருவளைய பிரச்சினைக்கான வீட்டு வைத்தியம்!

பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் கண்ணுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இது முக பொலிவை இல்லாமாக்கி, முகத்தில் உள்ள பிரகாசத்தை குறைக்கிறது.

இது போன்ற பிரச்சினைகள் அதிக தொலைபேசி பாவணை, கணனி பாவணை மற்றும் துாக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் தோன்றுகிறது.

உருளைகிழங்கை 2 துண்டுகளான வெட்டி, மிக்ஸியில் அரைத்து அதன் சாறை பிழிந்து சுத்தமான காட்டன் துாணியை அதில் நனைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த காட்டன் துாணியை கண்களின் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கருவளையம் மறையும்.
அதிகம் தொலைபேசி பயன்படுத்துவோருக்கு கருவளையப் பிரச்சினைகள் இருக்கும். இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பாதாமை பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் அரைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும் அத்துடன் கண் குளிர்ச்சியடையும்.

1 ஸ்பூன் மஞ்சள் தூளிலுடன், 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாகக் குழைத்து கண்களுக்கு கீழ் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் கருவளையம் மறையும்.
தேங்காய் பால், எண்ணெய் போன்றவைகள் பொதுவாக சருமம் மற்றும் தலைமுடி பிரச்சினைக்கு தீர்வு தரும். அந்த வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
வெள்ளரிக்காய் உடல் சூட்டை தனித்து உடலை குளிர்ச்சிப் பெற செய்யும் அதன்படி வெள்ளரிக்காயை பேஸ்ட் போல் அரைத்து கண்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் மறையும்.

Previous articleஇளநீரில் உள்ள மருத்துவ பலன்கள்!
Next articleFebruary 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 15