February 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 15

0

Today Special Historical Events In Tamil | 15-02 | February 15

February 15 Today Special | February 15 What Happened Today In History. February 15 Today Whose Birthday (born) | February-15th Important Famous Deaths In History On This Day 15/02 | Today Events In History February 15th | Today Important Incident In History | மாசி 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-02 | மாசி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.02 Varalatril Indru Nadanthathu Enna| February 15 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 15/02 | Famous People Born Today 15.02 | Famous People died Today 15-02.

Today Special in Tamil 15-02
Today Events in Tamil 15-02
Famous People Born Today 15-02
Famous People died Today 15-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-02 | February 15

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஆப்கானித்தான்)
பரிநிர்வாண நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மகாயான பௌத்தம்)
முழுமையான பாதுகாப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சிங்கப்பூர்)நிலவேம்பு கசாயம்

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-02 | February 15

590ல் பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான்.
706ல் பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார்.
1214ல் ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.
1493ல் கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.
1637ல் புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.
1690ல் உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1796ல் டச்சுக்களின் வசம் இருந்த கொழும்பு நகரைப் பிரித்தானியர் கைப்பற்றினர்.
1798ல் முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1865ல் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாரசீக வளைகுடா ஊடான தந்தி சேவை ஆரம்பமானது.
1898ல் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1909ல் மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.
1920ல் யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
1923ல் கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.
1933ல் மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.
1946ல் எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.
1950ல் சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1952ல் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
1961ல் பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.
1972ல் ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.
1982ல் நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.
1989ல் ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
1991ல் செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.
1994ல் உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1996ல் சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.
2001ல் முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.
2003ல் ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.
2010ல் பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.
2012ல் ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.
2013ல் உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-02 | February 15

1564ல் இத்தாலிய வானியலாளரும் இயற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ கலீலியோ கலிலி பிறந்த நாள். (இறப்பு-1642)
1748ல் ஆங்கிலேய மெய்யியலாளரான‌ ஜெரமி பெந்தாம் பிறந்த நாள். (இறப்பு-1832)
1820ல் அமெரிக்க செயற்பாட்டாளரான‌ சூசன் பிரவுன் அந்தோனி பிறந்த நாள். (இறப்பு-1906)
1858ல் அமெரிக்க வானியலாளரான‌ வில்லியம் என்றி பிக்கெரிங் பிறந்த நாள். (இறப்பு-1938)
1861ல் ஆங்கிலேய கணிதவியலாளரும் மெய்யியலாளருமான‌ ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் பிறந்த நாள். (இறப்பு-1947)
1899ல் கேரளக் கூத்துக் கலைஞரான‌ மணி மாதவ சாக்கியர் பிறந்த நாள். (இறப்பு-1990)
1922ல் இலங்கையின் அரசுத்தலைவரான‌ டி. பி. விஜயதுங்கா பிறந்த நாள்.
1923ல் தமிழக அரசியல்வாதியான‌ சத்தியவாணி முத்து பிறந்த நாள். (இறப்பு-1999)
1931ல் அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளரான மேக்சின் சிங்கர் பிறந்த நாள்.
1949ல் இலங்கை அரசியல்வாதியான‌ அனுரா பண்டாரநாயக்கா பிறந்த நாள். (இறப்பு-2008)
1952ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான‌ பிரதாப் போத்தன் பிறந்த நாள்.
1965ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ கிரெய்க் மேத்தியூஸ் பிறந்த நாள்.
1982ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ மீரா ஜாஸ்மின் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 15-02 | February 15

1145ல் திருத்தந்தையான‌ இரண்டாம் லூசியசு இறப்பு நாள்.
1869ல் இந்தியக் கவிஞரான‌ கலிப் இறப்பு நாள். (பிறப்பு-1796)
1965ல் அமெரிக்கப் பாடகரும் இசைக்கலைஞருமான‌ நாட் கிங் கோல் இறப்பு நாள். (பிறப்பு-1919)
1966ல் கொலம்பிய மதகுருவும் இறையியலாளருமான‌ கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ இறப்பு நாள். (பிறப்பு-1929)
1973ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான‌ டி. கே. சண்முகம் இறப்பு நாள். (பிறப்பு-1912)
1973ல் இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளரான‌ அழகு சுப்பிரமணியம் இறப்பு நாள். (பிறப்பு-1915)
1974ல் தமிழக எழுத்தாளரும் நடிகரும் பாடகரும் இயக்குநருமான‌ கொத்தமங்கலம் சுப்பு இறப்பு நாள். (பிறப்பு-1910)
1988ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ ரிச்சர்டு பெயின்மான் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2004ல் ஈழத்து எழுத்தாளரான‌ மன்னவன் கந்தப்பு இறப்பு நாள். (பிறப்பு-1926)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகருவளைய பிரச்சினைக்கான வீட்டு வைத்தியம்!
Next articleFebruary 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 16