காண்டம் பயன்படுத்துகிறீர்களா அப்படியானால் இதை தெரிந்து கொள்ளுங்கள்.

0

காண்டம் அணிவது கருத்தடைக்காக மட்டுமல்ல அது பாலியல் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கக் கூடியது.

உடலுறவின்போது ஆணோ , பெண்ணோ இதை அணிந்துகொண்டால், விந்து – சினைமுட்டை தொடர்பைத் தடுக்கலாம். இதனால் கருத்தரிப்பு தவிர்க்கப்படும். உறைகளுடன் சேர்த்து ‘ spermicide எனப்படும், விந்துகளைக் கொல்லும் மருந்துகளையும் பயன்படுத்துவதுண்டு.

உடலில் எந்த வகையிலும் வினைபுரியாமல் உடலின் வெளியே மட்டும் செயல்படுவதால் இது பாதுகாப்பானது. மேலும், உடலுறவினால் பரவும் நோய்களைத் தடுக்கவல்ல ஒரே கருத்தடை சாதனம் காண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணுறையில் 18% மற்றும் பெண்ணுறையில் 21% தோல்விகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கருத்தடை பேட்ச்
‘கான்ட்ராசெப்டிவ் பேட்ச்(patch)’ என்று கூறப்படும் கருத்தடை பேட்ச்களை முன்வயிறு, பின்புறம், முதுகு என்று பெண்கள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டால், அது சருமம் வழியாகக் கடத்தும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை உருவாதலைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்கும். மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து சீரான

இடைவெளியில் ஒட்டிக்கொள்ளக்கூடிய இந்த பேட்ச், இந்தியாவில் அவ்வளவாக உபயோகத்தில் இல்லை.

9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள கருத்தடை சாதனம் இது.

கருத்தடை வளைவுகள்
‘கான்ட்ராசெப்டிவ் ரிங்’ எனப்படும் கருத்தடை வளைவை பெண்கள் மாதவிலக்கின் முதல்நாள் அன்று அணிந்துகொண்டால், அது வெளியிடும் ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டிரான் ஹார்மோன்கள் சினைமுட்டை வெளியாதலைத் தடுத்து கருத்தரித்தலைத் தவிர்க்கும்.

9% தோல்வி ஏற்பட வாய்ப்புள்ள இது, பெண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

கருத்தடை ஊசி
பெண்கள் பொதுவாக மூன்ற மாத இடைவெளியில் போட்டுக்கொள்ளும் கருத்தடை ஊசி, ப்ரொஜெஸ்டோஜென் ஹார்மோனை வெளியிட்டு கருமுட்டை உருவாதலைத் தவிர்ப்பதோடு,

பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி விந்து கருப்பை அடையாமலும் தடுக்கும். உலகம் முழுக்கப் பரவலாகப் பின்பற்றப்படும் முறை இது.

6% தோல்வியடைய வாய்ப்புள்ள கருத்தடை ஊசி முறை, பெண்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியாவதைத் தடுப்பதுடன், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து விந்து உட்செல்வதையும் தடுத்து கர்ப்பத்தைத் தவிர்க்கும்.

இதை ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், குறைந்தது மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள்வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம்.

1% மட்டுமே தோல்வியடைய வாய்ப்புள்ள இம்ப்ளான்ட் சாதனம், பெண்களின் உடல் செயல்பாட்டில் மாறுதல்களை ஏற்படுத்தலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த பூக்களை 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து சாப்பிட்டால்!
Next articleமூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த காயை சாப்பிடுங்கள்!