கருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது?

0

கருவுற்ற பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முறை கருக்கலைப்பு மாத்திரைகள்தாம். ரணசிகிச்சைக்கு மாற்றாக மாத்திரைகளையே அநேகர் நாடுகின்றனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறை பக்கவிளைவுகளை அளிக்கக்கூடியவை. ஆகவே, மருத்துவ கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவது நல்லது. கருக்கலைப்பு மாத்திரைகளை எப்போது சாப்பிடலாம் என்பது குறித்து பெண்களிடையே பல சந்தேகங்கள் உள்ளன.

கருவை கலைத்திட வேண்டும் என்று நூறு சதவீதம் உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்வது நல்லது.

இந்தப் பரிசோதனை மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என்று உறுதியாக அறிந்து கொள்ள முடியும். கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கண்டிப்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். கருப்பைக்கு வெளியில் கரு உண்டாகியிருக்கும் நிலையில் கருக்கலைப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டால், சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எத்தனை நாள் கர்ப்பம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். கருவுற்று ஒன்பது வாரங்களுக்கு மேலாக கடந்திருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை உண்ணக்கூடாது. கர்ப்பந்தரித்து 49 நாள்கள் கடந்திருந்தால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கருத்தரித்த முதல் இரண்டு வாரங்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் மாத்திரையின் மூலம் கருக்கலைந்திட 95 முதல் 97 சதவீதம் வாய்ப்பு உண்டு. நாட்பட்ட அட்ரீனல் செயலிழப்பு, இரத்தசோகை, இருதய நோய் மற்றும் கட்டுப்படுத்தாத வலிப்பு குறைபாடு போன்ற உடல்நல பாதிப்பு இருப்போருக்கு இவ்விஷயத்தில் முறையான மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

கடைசியாக மாதவிடாய் நின்று 49 நாள்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். தவறினால், கருக்கலைப்புக்கு பின்னர் அதீத மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற வேண்டாத பின்விளைவுகள் உருவாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉச்சமே வராம விறைப்பு குறைஞ்சு ஆண்கள் தவிக்கறதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?
Next articleபொலிஸார் அவசர கோரிக்கை – தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெண்கள்! இவர்களை கண்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்!