கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகளின் முக்கிய தகவலை வெளியிட்ட பொலிஸ்!

0

டொராண்டோ ராப்டர்ஸ் வெற்றிக் கொண்டாத்தின்போது துப்பாக்கிச் சூடு நடந்திய மூவரின் பெயர் மற்றும் தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகாமையில் நடைபெற்ற டொராண்டோ ராப்டர்ஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போதே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

சுமார் ஒரு மில்லியன் மக்கள் குவிந்திருந்த நிலையில், திடீரென்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து ராப்டர்ஸ் ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நாலாபக்கமும் சிதறி ஓடியுள்ளனர்.

இதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் தொடர்பில் தற்போது பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதில், ஷாகுல் அந்தோணி மில்லர்(25), அப்திகரிம் கெரோவ்(18) மற்றும் தைனோ டூசைன்ட்(20) ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட இரு துப்பாக்கிகளும், அதே பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட புல்லட் உறைகளுடன் பொருந்தவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பொலிஸில் சிக்காத மூன்றாவது நபர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி 3.45 மனியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. மேலும், ஒரு மணி நேரம் முன்பு இரு வெவ்வேறு நிகழ்வுகளில் நால்வர் கத்தியாலும் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மில்லர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கெரோவ் மீது துப்பாக்கி தொடர்பான 14 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திங்களன்று நடந்து ராப்டர்ஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கெரோவ் கைது செய்யப்பட்டாலும், அவர் மீது கடந்த மே மாதத்தில் இருந்தே ஆட்கடத்தல், துப்பாக்கி காட்டி கிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் மீது ஆணைப்பத்திரம் வெளியிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்ப்ரைஸாக வீட்டுக்கு வரும் தந்தை! அந்த குழந்தையின் ரியாக்‌ஷன பாருங்க! கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இது போல கிடைக்குமா!
Next articleகவர்ச்சிக்கு மாறிவரும் வருத்தபடாத வாலிபர் சங்க நடிகை! புகைப்படம் உள்ளே!