கனடாவில் குளிரில் பனிக்கட்டியாக உறைந்துபோன நபர்! பரிதாப சம்பவம்!

0
429

கனடாவில் எட்மண்டன் பகுதியில் காமன்வெல்த் ஸ்டேடியம் அருகே பனியில் உறைந்த நிலையில் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை, காமன்வெல்த் ஸ்டேடியம் அருகே நடந்து சென்ற வழிப்போக்கர்கள், ஒருவர் பனிக்கட்டியாக உறைந்து கிடந்ததைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எட்மண்டனில் குளிர் -41 டிகிரி அளவிற்கு காணப்படும் நிலையில், அந்த நபர் கடுங்குளிரில் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உயிரிழந்த நபரை அடையாளம் காண இயலவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் எட்மண்டனில் கடும்குளிர் நிலவுவதையடுத்து குளிரைத் தாங்கும் வகையில் பாதுகாப்பான உடை அணிந்து கொள்ளுமாறும், தேவைப்பட்டாலொழிய வெளியே செல்ல வேண்டாம் என்றும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Previous articleவைரலாகும் புகைப்படம்! ட்ரெண்டிங்கில் தோனி மனைவியும், கோலி மனைவியும்! ஏன் தெரியுமா!
Next articleமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்! ஏன் தெரியுமா!