மைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்! ஏன் தெரியுமா!

0

இன்று முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்கிறார். இதன்போது, பாதுகாப்பு படையினர் வசமிருந்த ஒரு தொகுதி நிலங்களும் விடுவிக்கப்படுகிறது.

இன்றையதினம் ஜனாதிபதியின் விஜயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் யாரும் பங்குகொள்ளமாட்டார்கள்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கூட்டமைப்பு எம்.பிக்களின் அலுவலகத்திற்கு, முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நேரில் சென்று அழைப்பு கொடுத்திருந்தனர்.

எனினும், இன்றையதினம் அலரிமாளிகையில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியின் முதலாவது கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடக்கவிருக்கிறது.

அதில் கலந்துகொள்ள வேண்டுமென கூட்டமைப்பு எம்.பிக்கள் தீர்மானித்து, கொழும்பிற்கு சென்றிருக்கிறார்கள். மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் நாளைய அலரிமாளிகை கூட்டத்திற்கு செல்கிறார்கள். அதனால் அவர்கள் நாளை ஜனாதிபதியின் கூட்டத்திற்கு செல்லமாட்டார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகனடாவில் குளிரில் பனிக்கட்டியாக உறைந்துபோன நபர்! பரிதாப சம்பவம்!
Next articleபேட்ட படத்தின் 25 ஆம் நாளை முன்னிட்டு அனிருத் கொடுத்த ’மியூஸிக் டிரீட்!