கனடாவில், காலை உணவு தயாரிக்க சமையல் அறை சென்ற வேளையில் தனது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று வீட்டினுள் நுழைந்ததில், குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குறித்த சம்பவத்தில், நேற்று காலை வேளையில் சரியாக 7-30 மணியவில் தாய் ஒருவர் காலை உணவு தயாரிக்க சமையல் அறை சென்றுள்ளார்.
அப்போது, அந்த வழியாக அதிவேகத்தில் விரைந்து வந்த டிராக்டர் டிரெய்லர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததில் வீட்டின் சமையல் அறை கதவு வழியாக உள்ளே நுழைந்தது.
இதில், அதிர்ச்சியடைந்த பெண் தனது மகனை அழைக்கும் வேளையில் அவர் படுக்கையறை ஒன்றில் உறங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து, சத்தம் கேட்டு விரைந்து வந்த நபர் தீயணைப்பு துறை மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
It took crews more than 6 hours to pull the tractor trailer from the home’s kitchen and chimney along Chemin Dufresne in Gatineau – Police said it does not appear driver committed an infraction @ctvottawa pic.twitter.com/nmztbeXXwp
— Mike Arsalides (@MArsalidesCTV) June 21, 2019
இதில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குறித்த வாகனத்தை எடுத்தனர்.
இதில், குடும்ப உறுப்பினர்கள் பத்திரமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினர். மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.




