கண்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு! மானத்தை வாங்கிய நாய்!

0

கண்டியில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

கண்டியிலுள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில், இளைஞர், யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டின் ஒரு பகுதியாக மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. போட்டி ஆரம்பித்தமை குறித்து ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த கிராமத்தின் அனைவரது கவனமும் மரதன் ஓட்டப்போட்டியின் மீது காணப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டியாளர்களை தைரியப்படுத்தும் நோக்கில் கிராமத்தில் உள்ளவர்களால் நீர்ப்பிரயோகம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக திடீரென நபர் ஒருவர் தயாராகி உள்ளார்.. இதனை அறியாத அவரது வளர்ப்பு நாய் தன்னுடைய உரிமையாளருக்கு ஏதோ விபத்து ஏற்பட்டுள்ளதென எண்ணியுள்ளது.

அவரை துரத்தி சென்ற நாய் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளது. இதன் காரணமாக அவரது ஆடைகள் கழன்று வீ்ழ்ந்தமையினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் வெட்கமடைந்த அந்த நபர், அந்தப் பகுதியிலுள்ள காட்டுக்குள் சென்று மறைந்து கொண்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

எஜமான் மீதான நாயின் பாசத்தை புகழ்ந்து பேசிய கிராம மக்கள், அவரின் மானம் போனமை குறித்து நக்கலாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை!
Next articleகணவர் கண்முன்னே பலியான தாய், மகள்: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!