கண் நோய்களிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ள இத செய்தாலே போதும்!

0

சிலருக்கு எதற்கெடுத்தாலும் கண்களில் அலர்ஜி ஏற்படும்,நீண்ட நேரம் அதிக வெளிச்சம் உள்ள பகுதியில் இருந்தாலும், அல்லது தொடர்ந்து கணினியை பார்த்துக் கொண்டிருந்தால் கண் எரிச்சல் ஏற்படுக்கூடும்.

இதைத் தவிர சிலருக்கு காரணமேயில்லாமல் கண்கள் சிவந்து காணப்படும். உங்களது கண்களில் வெள்ளைப் படலம் திடீரென்று ரத்தச் சிவப்பு நிறமாக மாறினால் அதனை எப்படி எளிதாக கையாள வேண்டும் என்பதை இங்கே கொடுத்திருக்கிறோம்.

கண்களில் சிவப்பு நிறம் படர்வதை கண்களில் இருக்கும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதாக சொல்கிறார்கள். இது சிலருக்கு வலியையும் எரிச்சலையும் கொடுக்கும்.

ஸ்க்லெரோட்டிக் :

கண்களின் வெள்ளைப்படலம்,சிவப்பாகவும், கண்கள் வீங்கியும் இருந்தால் அதனை ஸ்க்லெரோட்டிக் என்கிறார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவற்றில் சில புகைப்பழக்கம், பாக்டீரியா தொற்று, தூக்கமின்மை, வெளிச்சம் குறைவான இடத்தில் நீண்ட நேரம் படிப்பது, ஓய்வில்லாமல் தொடர்ந்து அதிக வெளிச்சம் பார்ப்பது, கார்னியல் அல்சர் ஆகியவையும் காரணமாக இருக்கும்.

முதலில் அதற்கான காரணம் என்ன என்பதனை கண்டுபிடிக்க வேண்டும், உடனடி நிவாரணமாக சில வீட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள்.

சீரகம் :

சீரகத்தில் விட்டமின் சி மற்றும் ஏ இருக்கிறது இதில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. சீரகத்தினை பயன்படுத்துவதால் அது கண்களில் ஏற்படக்கூடிய பிரசரை கட்டுப்படுத்தும். க்ளூக்கோமா பாதிப்பு இருப்பவர்கள் இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.

ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விடவும், சிறிது நேரம் கொதித்தும் அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும், முழுவதும் ஆறிய பிறகு அந்த நீரைக் கொண்டு கண்களை சுத்தம் செய்ய வேண்டும்.

சாமமொயில் :

இது ஒரு வகை பூ. இதில் அதிகப்படியான ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகல்கள் இருக்கிறது. இது கண்கள் சிவந்திருப்பதை தடுப்பதுடன் கண்களின் வீக்கத்தினையும் குறைத்திடும்.

ஒரு கப் தண்ணீரில் இந்த சாமமொயில் பூக்களை போட்டு கொதிக்க வைத்திடுங்கள், பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி நன்றாக ஆறியதும் அதனைக் கண்டு கண்களை சுத்தமாக கழுவ வேண்டும்.

பால் :

பாலில் அதிகப்படியான ஃபோலிக் அமிலம்,மிரிஸ்டோலிக் அமிலம் உட்பட சில விட்டமின்ஸ்களும் இருக்கின்றன. இவை உங்களது சிவந்த கண்களை சரியாக்க மிகவும் உகந்தது.

இதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை, வெறும் பாலில் பஞ்சை நனைத்து அதனை உங்களது கண்களில் ஒற்றி எடுக்க வேண்டும்.

உப்பும் தண்ணீரும் :

மிகச்சிறந்த கிருமி நாசிமி இது. ஒரு கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்திடுங்கள் இதனைக் கொண்டு கண்களின் மேல்புறத்தில் லேசாக மசாஜ் செய்திடுங்கள்.

தொடர்ந்து இப்படி செய்து வர கண்களின் வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். வேண்டுமானால் வெதுவெதுப்பான நீரிலும் கூட மசாஜ் செய்திடலாம்.

விளக்கெண்ணெய் :

எல்லாருடைய வீட்டிலும் இருக்கக்கூடிய இந்த எண்ணை கண்களை தாக்கக்கூடிய நுண்ணிய பாக்டீரியாக்களை அழிக்கும். முதலில் குளிர்ந்த நீரினால் கண்களை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கண்களிலு ஒரேயொரு சொட்டு விளக்கெண்ணை விட வேண்டும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காய்கறிகள் :

மிகவும் எளிதாக நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறை இது. வீட்டில் சமையலுக்கு நறுக்கும் காய்கறிகளில் ஒரு கைப்பிடியளவு ஒரு பவுலில் சேர்த்து ஃபீரசில் வைத்து விடுங்கள். சுமார் மூன்று மணி நேரம் கழித்து அந்த பவுலினை வெளியில் எடுத்து மெல்லிய துண்டி கொண்டு ப்ரீஸ் ஆகி நிற்கும் காய்கறியை ஒரு முறை அழுத்தி உங்களது கண்களுக்கு அழுத்தம் கொடுங்கள்.

அதிக நேரம் கணினி பார்ப்பது, டீவி பார்ப்பதினால் உண்டாகக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்திடும்.

தேன் :

வீக்க ஏதேனும் இருந்தால் இந்த மருத்துவ முறையால் குறைந்திடும். பாலில் என்னென்ன இருக்கிறது என்பதை ஏற்கனவே தெரிந்திருக்கிறோம். இதனுடன் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் அதிகமிருக்கும் தேனை கலந்து கொள்ள வேண்டும்.

இரண்டு டீஸ்ப்பூன் தேன், அரை கப் பால். பால் இளஞ்சூடாக இருக்கலாம். இரண்டையும் நன்றாக கல்ந்து கொள்ளுங்கள். பின்னர் அதில் சுத்தமான காட்டன் துணியை தொய்த்து கண்களுக்கு மசாஜ் கொடுக்க வேண்டும்.

வெந்தயம் :

முதல் நாள் இரவே வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்திடுங்கள், குறைந்தது ஏழு மணி நேரமாவது வெந்தயம் ஊற வேண்டும், பின்னர் இந்த வெந்தயத்தை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்லுங்கள். இந்த பேஸ்ட்டினை கண்கள் சுற்றி பற்று போல போட்டுக்கொள்ள வேண்டும்.பத்து நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடலாம். இதனை நீங்கள் தினமும் கூட முயற்சிக்கலாம்.

மிளகு :

மிளகில் அதிகப்படியாக விட்டமின்ஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இவற்றுடன் தேன் கலந்து சிவந்த கண்களை, உங்களுக்கு எரிச்சல் தந்து கொண்டிருக்கிற கண்ணை சரி செய்ய அற்புதமான மருந்தினை தயாரிக்க போகிறீர்கள்.

ஒரு தேக்கரண்டி மிளகினை அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். மிகவும் நைஸாக அரைக்க வேண்டும். அந்த பொடியுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள். தற்போது இந்த பேஸ்ட்டினை எடுத்து கண்களில் தடவ வேண்டும். இது பாக்டீரியா தொற்றினை எளிதாக நீக்கும். இதனை நீங்கள் தினமும் கூட செய்யலாம்.

ஸ்பூன் :

இது உங்களுக்கு வேடிக்கையாக தோன்றலாம் ஆனால் சிறந்த பலனை அளிக்கக்கூடியது. உடனடி நிவாரணம் அளிக்கும். குளிர்ந்த நீரை ஒரு கிளாசில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுள் ஒரு ஸ்பூனை வைத்திடுங்கள்.

இரண்டு நிமிடம் கழித்து ஸ்பூனை வெளியில் எடுத்து அதன் பின் பாகம் கண்களில் விழுமாறு சிறிது நேரம் வைக்க வேண்டும். அந்த குளிர் தன்மை விலகும் வரை கண்களில் வைத்திருக்கலாம். குளிர்ந்த நீரில் வைப்பதற்கு பதிலாக ஸ்பூனை சில நிமிடங்கள் ப்ரீசரிலும் வைக்கலாம். ஒரே ஸ்பூனை மீண்டும் மீண்டும் தண்ணீரில் வைத்து வைப்பதோ அல்லது ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தவோ வேண்டாம்.

ரெகுலர் :

இதைத் தவிர கண்களுக்கு, கண்களின் வீக்கம் குறைய என்று சொன்னாலே உருளைக்கிழங்கு,வெள்ளரி, ஆப்பிள் சிடர் வினிகர்,பேக்கிங் சோடா, ரோஸ் வாட்டர்,டீ பேக் ஆகியவற்றையெல்லாம் பயன்படுத்த சொல்வார்கள் அதனையும் முயற்சிக்கலாம்.ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் மாறி மாறி பயன்படுத்தாமல் எதாவது ஒன்றை மட்டும் முயற்சிக்கவும்.

தவிர்க்கலாம் :

பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தேடுவதை விட, அந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. கண்கள் சிவந்து போவதற்கு மிக முக்கிய காரணமாக சொல்வது தொடர்ந்து அதிக நேரம் டிவி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது தான் முக்கிய காரணியாக இருக்கிறது. இதைத் தவிர்க்க கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கமால் ஓய்வு கொடுங்கள்.

அடுத்தபடியாக புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் கண்கள் சிவந்து போவதற்கு காரணமாக இருக்கிறது. இவை உங்கள் உடலில் டீ ஹைட்ரேஷனை ஏற்படுத்திடும். இதனால் அவற்றை தவிர்ப்பது நல்லது. அதே போல எப்போதும் உடலினை எப்போதும் ஹைட்ரேஷனுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி கண்டுபிடிப்பது?… எதில் சுவை அதிகம்?
Next articleஉடல் எடையை வேகமா குறைக்க வேணுமா? இந்த விதையை ஒரு கையளவு வாயில போடுங்க!