கணவர் விவாகரத்து கொடுத்ததால் ஒரே நாளில் உலகின் மிகப்பெரிய பணக்காரியான பெண்!

0

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. ஆனால் தற்போது விவகாரத்து ஒன்று அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய அவருக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கொடுத்து மலைக்க வைத்துள்ளார்.

வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களும் பின்னாளில் சாதனைகளாக மாறி நிலைத்து நின்றாலும், சில நேரங்களில் வினோத சம்பவங்களும் வரலாற்று சாதனகளாக மாறிவிடுவது உண்டு.

அந்த வகையில் தம்பதியரின் விவாகரத்தே இன்று உலக சாதனையாக மாறியுள்ளது. ஆம், அமேசான் நிறுவனர் தனது மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து விவாகரத்து பெற்றுள்ளதை உலகமே பரபரப்புடன் உற்றுநோக்கியுள்ளது.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, 1993-ம் ஆண்டு நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார்.

25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருடன் ஜெப் பெசோஸ் நெருங்கி பழகியதால் அவரை விவாகரத்து செய்ய மெக்கன்சி முடிவு செய்தார்.

அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பான 10 லட்சம் கோடி ரூபாயில், 5 லட்சம் கோடி ரூபாய் வரை அவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக கிடைக்கும் என எதிர்ப்பாக்கப்பட்டது.

ஆனால் மொத்த சொத்தில் தனக்கு 25 சதவீதம் மட்டும் போதும் என மக்கின்சி கூறியதால் அவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை ஜீவனாம்சமாக அளித்துள்ளார் ஜெப் பெசோஸ்.

மலைக்க வைக்கும் இந்த் காஸ்ட்லி விவாகரத்தால் ஒரே நாளில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பெண் பணக்காரராக மெக்கன்சி மாறியுள்ளார்.

இந்த விவகாரத்துக்கு பிறகு ஜெப் பெசோஸூக்கு உள்ள சொத்து மதிப்பு சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. எனினும் அவரே தான் இன்றும் உலகின் மிக பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

1999ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த அலெக் – ஜோஸ்லின் தம்பதிகளின் விவாகரத்தே உலகின் காஸ்ட்லியான விவாகரத்தாக பார்க்கபப்ட்டது.

அப்போது மனைவி ஜோஸ்லினுக்கு அலெக் ஜீவனாம்சமான கொடுத்த தொகை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய். இந்த வினோத சாதனையை 20 ஆண்டுகள் கழித்து முறியடித்துள்ளது ஜெப் பெசோஸ்- மெக்கென்சி ஜோடி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநயன்தாராலாம் இல்ல, இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் டாப்! எதுல தெரியுமா!
Next articleகர்ப்பமாக இருக்கும்போது இப்படி ஒரு மோசமான உடையிலா பொது இடத்திற்கு வருவது! சமீரா ரெட்டி மீது கடும் விமர்சனம்!