கடுமையான மக்கள் எதிர்ப்பால் தனது பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ள ஜனாதிபதி!

0

அல்ஜீரியா ஜனாதிபதி அப்தெலாசிஸ் பவுடேபிலிகா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக அல்ஜீரியாவின் ஆட்சி அதிகாரத்தை அப்தெலாசிஸ் பவுடேபிலிகா தம் வசம் வைத்துக் கொண்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அல்ஜீரியா ஜனாதிபதியை பதவி விலகுமாறு கடந்த சில வாரங்களாக அந்த நாட்டின் பல தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, அல்ஜீரியா ஜனாதிபதி அப்தெலாசிஸ் பவுடேபிலிகாவின் பதவி விலகல் இடம்பெறவுள்ளது.

தற்போது 82 வயதாகும் அவரால், ஆட்சிப் பணிகளை சரிவர நிறைவேற்ற முடியாதுள்ளதாக அல்ஜீரிய இராணுவம் அண்மையில் வெளிப்படையாக கூறியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனவளர்ச்சி குன்றிய மகனுடன் பெற்றோர் தற்கொலை! உறவினர்களால் நிகழ்ந்த கொடுமை!
Next articleவெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த அப்பா! அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம்!