Home Patti Vaithiyam கடுக்காயின் மருத்துவ பயன்கள்!

கடுக்காயின் மருத்துவ பயன்கள்!

0
2822

கடுக்காயின் கொட்டை விஷ தன்மையுடையது எனவே அதனை நீக்கி விட்டு அதிலுள்ள சதை பகுதியை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, நன்கு ஆறியபின்னர் அதிகாலையில் குடித்து வரும் போது நாலைந்து முறை பேதியாகி மலச்சிக்கல் ம்றும் வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள புண்களை மாற்றுவதுடன், மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு திப்பிலித்தூள் மற்றும் சுக்குத்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட்டுவரும் போது, வாதவலி மற்றும் பித்த நோய்கள் போன்றன குணமடையும்.

பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் ஏற்படக் கூடிய பல்வேறுபட்ட நோய்களைக் குணமாக்குகின்றது.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையானளவு இஞ்சி, உளுத்தம்பருப்பு, மிளகாய் மற்றும் புளி என்பன சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் நன்கு வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவரும் போது, சமிபாட்டுத் தன்மை மேலும் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் நீங்கி;, உடல் பலம் பெறும்.

கடுக்காய் வலிமையூட்டி, இருமல், நீர்பெருக்கி, புண்கள், நாவறட்சி, வயிற்றுப்பொருமல், விக்கல் காமாலை, கண்நோய், கை கால் நமச்சல், இரைப்பு, மார்பு நோய், மூலம் மற்றும் காது நோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

கடுக்காய் ஓட்டை நன்கு பொடி செய்து இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவரும் போது உடல் வலுவடைவதுடன் வாதமும் குணமாகும்.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு மற்றும் மாலையில் கடுக்காய் என தொடர்ந்து 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டு வரும் போது நரை, மூப்பு திரை என்பன நீங்கி இளமையாக வாழலாம்.

By: Tamilpiththan

Previous articleகருப்பையை சுத்தமாக்கும், வயிற்றுப்புழுக்களைக் அழிக்கும் தன்னை கொண்ட கல்யாண முருங்கை!
Next articleஇது கொலையா தற்கொலையா ? நீங்க புத்திசாலியா இல்லையா? Test your Brain