கடற்கரையில் குப்பைகள் பொறுக்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்? இதன் மதிப்பு 500,000 டொலராம்!
தாய்லாந்தில் Surachet Chanchu என்ற நபர் கடந்த புதன்கிழமை கடற்கரை ஓரமாக கிடக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்து வரும் வேலையை செய்து வந்துளளார். அந்த நபருக்கு கிடைத்த பொருள் இன்று பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. இதன் விலை 500,000 டொலர் விலை போகும் என்று கூறப்படுகின்றது. அது என்ன தெரியுமா? சுமார் 37 பவுண்ட் எடை கொண்ட திமிங்கல வாந்தி. பொதுவாக திமிங்கலத்தின் செரிமானப் பகுதியில் இருந்து வெளிவரும் கழிவுகளை வாசனை திரவிய தொழிலில் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.