அதிர்வலைகளை ஏற்படுத்தியபிரித்தானிய பொதுத் தேர்தலின் முக்கிய நிகழ்வுகள் !

0

அதிர்வலைகளை ஏற்படுத்தியபிரித்தானிய பொதுத் தேர்தலின் முக்கிய நிகழ்வுகள் !

பிரித்தானியாவில் மிக முக்கியமான சூழலில் போக்கையே மாற்றியமைத்துள்ளது பொதுத் தேர்தல் இதுவரை வெளியான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

பிரித்தானிய பொதுத் தேர்தலில் 1935 ஆம் ஆண்டுக்கு பின் தோல்வியை எதிர்கொண்டுள்ளது தொழிலாளர் கட்சி. அதன் தலைவர் ஜெரமி கார்பின் தமது பதவியை துறப்பதாக அதிரடியாக அறிவித்திருந்தாலும், அவர் இதுவரை பதவி விலகவில்லை. பெரும்பான்மைக்கு 326 இருக்கைகள் தேவை என்ற நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 360 இருக்கைகளுக்கும் அதிகமாக வென்று அசுர பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.கன்சர்வேடிவ் கட்சியின் அசுர வெற்றியானது உடனடியாக Brexit நிறைவேறும் என்பது மட்டுமின்றி, ஜனவரி 31 ஆம் திகதிக்குள் பிரித்தானியா ஐரோப்பா ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் என்பது போரிஸ் ஜான்சனின் இந்த இமாலய வெற்றி சுட்டிக்காட்டுகிறது. இந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வசமிருந்த சுமார் 55 இருக்கைகளை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றியுள்ளது.

1935 தொடக்கம் தொழிலாளர் கட்சி வசமிருந்த Wrexham இந்த முறை கன்சர்வேடிவ் கட்சி கைப்பற்றியது. இதே போன்று 1922 முதல் தொழிலாளர் கட்சி வசமிருந்த Leigh இந்தமுறை கன்சர்வேடிவ்களிடம் வீழ்ந்துள்ளது.
வெறும் 149 வாக்குகளில் அதிர்ச்சி தோல்வியடைந்த லிபரல் டெமக்ராட் தலைவர் ஜோ ஸ்வின்சன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜோ ஸ்வின்சனிடம் இருந்து வெறும் 149 வாக்குகளில் வெற்றியைப் பறித்த ஸ்காட்டிஷ் தேசிய கட்சி, அதன் தலைவர் நிக்கோலா ஸ்டர்ஜன் வெற்றிக்களிப்பில் ஆடிய நடனம் சமூக வலைதள பக்கத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தொழிலாளர் கட்சி எம்.பி ரூத் ஸ்மித், தமது தோல்விக்கு முக்கிய காரணம் ஜெரமி கார்பின் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதுடன், தொழிலாளர் கட்சியை ஒரு இனவாத கட்சியாக ஜெரமி கார்பின் மாற்றியுள்ளதாகவும் அவர் கொந்தளித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉயிச்சத்துக்களின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ! உடலில் உயிர்ச்சத்து B குறைந்தால் ஏற்படும் விளைவுகள் !
Next articleகடற்கரையில் குப்பைகள் பொறுக்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்? இதன் மதிப்பு 500,000 டொலராம்!