ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள்,பருக்களை இயற்கையான முறையில் போக்க சூப்பர் டிப்ஸ்!

0

அக்காலத்தில் நம் பாட்டிமார்கள் அழகு நிலையங்களுக்குச் சென்றா, தங்களது அழகைப் பராமரித்தார்கள். நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமலும் இருந்தது.

இக்கட்டுரையில் நம் முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும்.

பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடும் அழகாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

பூண்டு

பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

ஜிங்க் மற்றும் செலினியம்

ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎலுமிச்சை சாறுடன் இந்த ஏதாவது ஒரு பொருளை சேர்த்து தலையில் தடவுங்கள். வழுக்கையே விழாது!
Next articleஉங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? விரைவில் விடுபட இதோ சில வழிகள்!