ஒரு பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகம் இருந்தால் தென்படும் அறிகுறிகள்!

0

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண் ஹார்மோன். பலரும் இது ஆண்களுக்கு மட்டும் தான் சுரக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களையும் சுரக்கும். அதில் டெஸ்டோஸ்டிரோனை குறைவான அளவிலும், ஈஸ்ட்ரோஜெனை அதிகமான அளவிலும் சுரக்கும்.

இருப்பினும் சில பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் ஹார்மோன் அதிகமான அளவில் சுரக்கும். அதிலும் பி.சி.ஓ.எஸ் மற்றும் அட்ரினல் சுரப்பி கோளாறுகளால் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படும். இங்கு ஒரு பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமான அளவில் சுரந்தால் தென்படும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதிகப்படியான முடியின் வளர்ச்சி
முகம் மற்றும் உடலில் அதிகளவு முடி வளர்ச்சி இருந்தால், அது டெஸ்டோஸ்டிரோன் அதிகளவில் சுரக்கப்படுகிறது என்று அர்த்தம். அதிலும் கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்களில் அதிகளவு முடியின் வளர்ச்சி இருப்பின், அது அப்பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கப்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

முகப்பரு
ஒரு பெண் அடிக்கடி முகப்பருவால் அதிக தொல்லையை அனுபவித்து வந்தால், அது அப்பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

உடல் பருமன்
உடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் இருந்தால், திடீரென்று உடல் பருமனடையும் மற்றும் சர்க்கரை அல்லது உப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும்.

முறையற்ற மாதவிடாய் சுழற்சி
ஒரு பெண்ணிற்கு மாதந்தோறும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், அது அப்பெண்ணிற்கு பி.சி.ஓ.எஸ் என்னும் கோளாறு உள்ளது என்று அர்த்தம்.

முடி உதிர்தல்
தலைமுடியின் அடர்த்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தால், அதுவும் ஒரு பெண்ணின் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

பெரிதாகிய பெண்குறி
ஒரு பெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் இருந்தால், பெண்குறியின் அளவு பெரிதாகும். இதற்கு அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் புதிய சதை வளர்ச்சியினால் ஏற்படும் கட்டி தான் காரணம். இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்று வந்தால் சரிசெய்யலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்கள் கட்டாயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதன் அறிகுறிகள்!
Next articleமனதை ஒருமுகப்படுத்த மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத உணவுகள்!